வெளிநாடு செல்ல அனுமதி வழங்க கோரிக்கை : கார்த்தி சிதம்பரத்தின் மனுவை அவசர வழக்காக விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு


வெளிநாடு செல்ல அனுமதி வழங்க கோரிக்கை : கார்த்தி சிதம்பரத்தின் மனுவை அவசர வழக்காக விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு
x
தினத்தந்தி 16 Jan 2019 10:30 PM GMT (Updated: 16 Jan 2019 9:10 PM GMT)

காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய நிதி மந்திரியுமான ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் மீது ஏர்செல் மேக்சிஸ் மற்றும் ஐ.என்.எக்ஸ் மீடியா உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.

புதுடெல்லி,

சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை போன்ற விசாரணை அமைப்புகள் பதிவு செய்துள்ள இந்த வழக்குகளில், கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், வெளிநாடு செல்ல அனுமதி கேட்டு கார்த்தி சிதம்பரம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டும் என தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், எல்.நாகேஸ்வரராவ், சஞ்சய் கி‌ஷன் கவுல் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

ஆனால் இந்த வழக்கை அவசரமாக விசாரிக்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர். கார்த்தி சிதம்பரம் இப்போது எங்கே இருக்கிறாரோ அங்கேயே இருக்கட்டும். இந்த மனுவை அவசரமாக விசாரிக்க முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.


Next Story