தினகரன் அணிக்கு குக்கர் சின்னம் வழங்க முடியுமா? தேர்தல் ஆணையம் பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு


தினகரன் அணிக்கு குக்கர் சின்னம் வழங்க முடியுமா? தேர்தல் ஆணையம்  பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு
x
தினத்தந்தி 17 Jan 2019 12:22 PM GMT (Updated: 17 Jan 2019 12:22 PM GMT)

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு குக்கர் சின்னம் ஒதுக்குவது தொடர்பாக தேர்தல் ஆணையம் பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

புதுடெல்லி

திருவாரூர் இடைத்தேர்தலில் தங்கள் கட்சிக்கு குக்கர் சின்னம் ஒதுக்க கோரி, அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், தமிழகத்தில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற  கழகத்திற்கு குக்கர் சின்னம் ஒதுக்குவது குறித்து வெள்ளிக்கிழமைக்குள் பதில் அளிக்க வேண்டுமென தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

தினகரன் அணிக்கு குக்கர் சின்னம் வழங்க முடியுமா? என்பதை நாளை ஆஜராகி விளக்கம் அளிக்க இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு சுப்ரீம் கோர்ட்  உத்தரவிட்டு உள்ளது.

வெள்ளிக்கிழமை அன்று தேர்தல் ஆணையம் தனது பதிலை சுப்ரீம் கோர்ட்டில்   தெரிவிக்க உள்ளது. 

Next Story