கடும் பனிப்பொழிவால் வைஷ்ணவ தேவி கோவிலுக்கு ஹெலிகாப்டர் சேவை நிறுத்தம்


கடும் பனிப்பொழிவால் வைஷ்ணவ தேவி கோவிலுக்கு ஹெலிகாப்டர் சேவை நிறுத்தம்
x
தினத்தந்தி 22 Jan 2019 6:30 PM GMT (Updated: 22 Jan 2019 6:24 PM GMT)

காஷ்மீர் மாநிலத்தில் நிலவும் கடுமையான பனிப்பொழிவு காரணமாக, அங்குள்ள வைஷ்ணவ தேவி கோவிலுக்கு ஹெலிகாப்டர் சேவை நிறுத்தப்பட்டுள்ளது.

ஜம்மு,

காஷ்மீர் மாநிலத்தில் உள்ள வைஷ்ணவ தேவி கோவிலுக்கு ஆண்டு தோறும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வது வழக்கம். பக்தர்களின் வசதிக்காக ஹெலிகாப்டர் வசதி, அவர்களின் பொருட்களை கொண்டு செல்ல ‘ரோப்’ வசதி ஆகியவையும் செய்யப்பட்டு உள்ளன.இந்நிலையில் அங்கு தற்போது கடும் பனிப்பொழிவு இருந்து வருகிறது. மோசமான தட்பவெப்பம் காரணமாக வைஷ்ணவ தேவி கோவிலுக்கு ஹெலிகாப்டர் சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. அதே போல் ‘ரோப்’ வசதியும் நிறுத்தப்பட்டது. எனினும் பக்தர்கள் நடந்தும், குதிரைகள் மீதும் ஏறியும் தங்கள் புனித பயணத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

இதேபோல் இமாசல பிரதேச மாநிலத்திலும் பனிப்பொழிவு கடுமையாக உள்ளது. சுற்றுலா தலங்களான சிம்லா, மணாலி, தர்மசாலா உள்பட பல்வேறு இடங்களிலும் பனிப்பொழிவு அதிக அளவில் இருக்கின்றன. சிம்லாவில் நேற்று காலை நிலவரப்படி 5 செ.மீ. பனிப்பொழிவு பதிவாகி உள்ளது. மணாலியில் மைனஸ் 1.8 டிகிரி செல்சியஸ் குளிர் நிலவுகிறது.

Next Story