கோடநாடு கொலை, கொள்ளை விவகாரம்: சிபிஐ விசாரணை கோரிய மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி


கோடநாடு கொலை, கொள்ளை விவகாரம்:  சிபிஐ விசாரணை கோரிய மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி
x
தினத்தந்தி 25 Jan 2019 6:43 AM GMT (Updated: 25 Jan 2019 6:43 AM GMT)

கோடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோரிய மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.

புதுடெல்லி,

கோடநாடு கொலை, கொள்ளை சம்பவங்கள் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில்  மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

அதில் கோடநாடு எஸ்டேட்டில் நடைபெற்ற கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் சாதாரண சம்பவங்கள் அல்ல. இதற்கும், மறைந்த முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதா மரணத்துக்கும் தொடர்பு இருப்பதாக சந்தேகம் உள்ளது.

எனவே, இந்த வழக்கை தமிழ்நாடு போலீஸ் விசாரிக்காமல் சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு இன்று  தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்  தலைமையிலான அமர்வு முன்பு  விசாரணைக்கு வந்தது. அப்போது  இந்த மனுவை விசாரிக்க எந்த முகாந்திரமும் இல்லை என கூறி,  டிராபிக் ராமசாமி மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

Next Story