மத்திய அரசுக்கு எதிராக டெல்லியில் மாபெரும் போராட்டம் நடத்த சந்திரபாபு நாயுடு திட்டம்


மத்திய அரசுக்கு எதிராக டெல்லியில் மாபெரும் போராட்டம் நடத்த சந்திரபாபு நாயுடு திட்டம்
x
தினத்தந்தி 9 Feb 2019 5:48 AM GMT (Updated: 9 Feb 2019 5:48 AM GMT)

மத்திய அரசுக்கு எதிராக டெல்லியில் மாபெரும் போராட்டம் நடத்த சந்திரபாபு நாயுடு அரசு திட்டமிட்டுள்ளது.

அமராவதி,

ஆந்திர பிரதேச சிறப்பு அந்தஸ்து உள்பட பல்வேறு கோரிக்கைகளை  நிறைவேற்ற மறுக்கும் மத்திய அரசுக்கு எதிராக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு  அண்மைக்காலமாக போர்க்கொடி உயர்த்தி வருகிறார். இந்த நிலையில், மத்திய அரசுக்கு எதிராக வரும் 11-ஆம் தேதி டெல்லியில் ஒருநாள் போராட்டம் நடத்த சந்திரபாபு நாயுடு திட்டமிட்டுள்ளார்.

இதற்காக, 20 பெட்டிகளுடன் கூடிய இரண்டு ரயில்கள் வாடகைக்கு எடுக்கப்பட்டுள்ளது. தென் மத்திய ரயில்வேயிடம் எடுக்கப்பட்ட ரயில்கள் முறையே, அனந்தபுரம் மற்றும் ஸ்ரீகாகுளம் ஆகிய இடங்களில் இருந்து டெல்லிக்கு செல்ல உள்ளன. 

போராட்டத்தில் கலந்து கொள்ள விரும்பும் தன்னார்வ அமைப்புகள், அரசியல் கட்சிகள், அமைப்புகள் ஆகியவை 10-ஆம் தேதி கிளம்பும் ரயில்கள் மூலம் பயணித்து முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் டெல்லியில் நடக்கும் போராட்டத்தில் கலந்து கொள்ளலாம் என்று ஆந்திர அரசு வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயில்கள் வாடகைக்கு எடுக்க மட்டும் ஒரு கோடிக்கு மேல் ஆந்திர அரசு செலவிட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

Next Story