தேசிய செய்திகள்

9 வயது சிறுவனை பாலியல் பலாத்காரம் செய்ததாக 36 வயது பெண் மீது வழக்கு + "||" + Kerala woman rapes 9-year-old boy, booked

9 வயது சிறுவனை பாலியல் பலாத்காரம் செய்ததாக 36 வயது பெண் மீது வழக்கு

9 வயது சிறுவனை பாலியல் பலாத்காரம் செய்ததாக 36 வயது பெண் மீது வழக்கு
9 வயது சிறுவனை பாலியல் பலாத்காரம் செய்ததாக 36 வயது உறவுக்கார பெண் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
மலப்புரம்

கேரள மாநிம் மலப்புரம் மாவட்டம் தென்கிப்பாலம் போலீசார் 9 வயது சிறுவன் ஒருவனை 36 வயது பெண் பாலியல் பலாத்காரம் செய்ததாக வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

இந்த விவகாரம் கடந்த வாரம் உள்ளூர் டாக்டர் ஒருவர் மூலம் வெளிவந்து உள்ளது. டாக்டர் குழந்தைகள் உதவி மையத்திற்கு இந்த தகவலை கொடுத்து உள்ளார். குழந்தைகள் உதவி மைய அதிகாரிகள் சிறுவனை மீட்டு அவனிடம் இருந்து வாக்குமூலம் பெற்றுக் கொண்டு பின்னர் அதனை போலீசாருக்கு தெரிவித்து உள்ளனர்.

போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ்  வழக்குப்பதிவு செய்து உள்ளனர். 

குழந்தைகள் உதவி மைய அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-

சிறுவன் ஒரு வருடத்திற்கும் மேலாக பாலியல் தொந்தரவு செய்யப்பட்டு  உள்ளான். இதனால் மன ரீதியாகவும் பாதிக்கப்பட்டு உள்ளான். அந்த சிறுவனின் மாமாவின் மனைவி இத்தகைய கொடுமையை செய்து உள்ளார் என கூறினர்.

சமீபத்தில் 9 வயது சிறுவனை பாலியல் கொடுமை செய்ததாக கூறி எர்ணாகுளத்தில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. பெண் கலெக்டரை மூளை இல்லாதவர் என திட்டிய எம்.எல்.ஏ.
தனக்கு நோட்டீஸ் அனுப்பிய பெண் கலெக்டரை மூளை இல்லாதவர் என எம்எல்ஏ ஒருவர் திட்டி உள்ளார்.
2. புயலால் விழுந்து கிடக்கும் மரங்களை கொண்டு பாலங்கள் அமைத்து மக்களை மீட்கும் ராணுவ வீரர்கள்
கேரளாவில் புயலால் விழுந்து கிடக்கும் மரங்களை கொண்டு பாலங்கள் அமைத்து மக்களை மீட்கும் பணியில் ராணுவ வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். #KeralaFlood2018
3. கேரளாவில் 29-ந்தேதி முதல் கல்வி நிறுவனங்களை இயக்க திட்டம்
கேரளாவில் 29 ந்தேதி முதல் கல்வி நிறுவனங்களை இயக்க மாநில அரசு திட்டமிட்டு உள்ளது
4. வெள்ளம் பாதித்த கேரளாவில் எம்.எல்.ஏக்களுக்கு சொகுசு அபார்ட்மெண்ட் கட்டுவதில் சர்ச்சை
வெள்ளம் பாதித்த கேரளாவில் எம்.எல்.ஏக்களுக்கு சொகுசு அபார்ட்மெண்ட் கட்டுவது சர்ச்சைக்கு உள்ளாகி உள்ளது.
5. சென்னையில் 10-ம் வகுப்பு மாணவனை கடத்தி வந்து குடும்பம் நடத்திய 40 வயது ஆசிரியை
பத்தாம் வகுப்பு மாணவனை ஆசிரியை ஒருவர் கடத்தி குடும்பம் நடத்தி வந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆசிரியரின் தேர்வுகள்...