“ஆந்திராவிடம் திருடியதை அம்பானியிடம் கொடுத்துவிட்டார்” பிரதமர் மோடி மீது ராகுல் காந்தி சாடல்


“ஆந்திராவிடம் திருடியதை அம்பானியிடம் கொடுத்துவிட்டார்” பிரதமர் மோடி மீது ராகுல் காந்தி சாடல்
x
தினத்தந்தி 11 Feb 2019 9:53 AM GMT (Updated: 11 Feb 2019 9:53 AM GMT)

“ஆந்திராவிடம் திருடியதை அம்பானியிடம் கொடுத்துவிட்டார்” என பிரதமர் மோடியை ராகுல் காந்தி சாடியுள்ளார்.

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படாத விவகாரத்தில் பா.ஜனதா கூட்டணியில் இருந்து விலகிய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, எதிர்க்கட்சிகளை ஒன்றாக இணைக்கும் பணியை மேற்கொண்டு வருகிறார். ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து கோரி சந்திரபாபு நாயுடு டெல்லியில் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகிறார். சந்திரபாபு நாயுடுவின் போராட்டத்திற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆதரவு தெரிவித்துள்ளார். உண்ணாவிரத மேடைக்கு சென்ற ராகுல் காந்தி பிரதமர் மோடியை கடுமையாக விமர்சனம் செய்தார்.

“பிரதமர் மோடி எங்கெல்லாம் செல்கிறாரோ, அங்கெல்லாம் பொய்களைதான் அறிவித்து வருகிறார். ஆந்திரா சென்று சிறப்பு அந்தஸ்து தொடர்பாக  பொய்களை பரப்பியுள்ளார். வடகிழக்கு மாநிலங்களுக்கு செல்லும் போது அங்கு ஒரு பொய்யை வெளியிடுகிறார். மராட்டியம் செல்லும்போது அங்கும் பொய்யை வெளியிடுகிறார். பிரதமர் மோடி எந்தவித நம்பகத்தன்மையையும் பெறவில்லை.”என்றார் ராகுல் காந்தி.

 “ஆந்திராவிடம் திருடியதை அம்பானியிடம் கொடுத்துவிட்டார்” எனவும் பிரதமர் மோடியை ராகுல் காந்தி சாடியுள்ளார். 

Next Story