தேசிய செய்திகள்

மாநிலங்கள் தங்கள் நிதிக்காக பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்படுவதாக கூறுவது தவறு - தம்பிதுரை கருத்திற்கு பியூஷ் கோயல் பதில் + "||" + piyush goyal is the answer to thambidurai

மாநிலங்கள் தங்கள் நிதிக்காக பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்படுவதாக கூறுவது தவறு - தம்பிதுரை கருத்திற்கு பியூஷ் கோயல் பதில்

மாநிலங்கள் தங்கள் நிதிக்காக பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்படுவதாக கூறுவது தவறு - தம்பிதுரை கருத்திற்கு பியூஷ் கோயல் பதில்
மாநிலங்கள் தங்கள் நிதிக்காக பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்படுவதாக கூறுவது தவறு என்று தம்பிதுரை கருத்திற்கு பியூஷ் கோயல் பதில் அளித்துள்ளார்.
புதுடெல்லி,

ஜிஎஸ்டி மூலம் மத்திய அரசு மாநில அரசின் அதிகாரத்தை பறித்து உள்ளது. ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வ்ழங்குவதன் மூலம் விவசாயிகளின் வாழ்வாதாரம் எப்படி உயரும். மத்திய அரசின்  பணமதிப்பிழப்பு நடவடிக்கை மூலம் என்ன நன்மை கிடைத்தது. மாநில அரசுக்கு தரவேண்டிய நிலுவை தொகையை மத்திய அரசு தரவில்லை. 

இடைக்கால பட்ஜெட் மத்திய, மாநில அரசுகளை பாதிக்கும் வகையில் உள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் வேலை வாய்ப்பை அதிகரிக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை, 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வேலைவாய்ப்பு திண்டாட்டம் அதிகரித்துள்ளது. தங்களின் நிதிக்காக மாநில அரசு பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்படுவதாகவும் மக்களவையில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை குற்றம் சாட்டியிருந்தார்.

மக்களவையில் அதிமுக எம்.பி. தம்பிதுரை கருத்துக்கு மத்திய மந்திரி பியூஷ் கோயல் கூறியதாவது:

மாநிலங்கள் தங்கள் நிதிக்காக பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்படுவதாக கூறுவது தவறு. ஜி.எஸ்.டி., மூலம் வசூலிக்கப்படும் வரிப்பணம் அனைத்து மாநிலங்களுக்கும் பகிர்ந்தளிக்கப்படுகிறது. ஜி.எஸ்.டி மூலம் அனைத்து வரிகளையும் மத்திய அரசு எடுத்துக்கொள்வதாக தம்பிதுரை புரிந்துக்கொள்ளக்கூடாது. முன்பை விட அதிகமாக நிதி பகிர்வு செய்யப்படுகிறது. 

இவ்வாறு அவர் தெரிவித்தார்.