தேசிய செய்திகள்

காரில் இருந்து வெளியே இழுத்து இளம்பெண் 10 நபர்களால் பாலியல் பலாத்காரம் + "||" + 21-year-old woman dragged out of car, gang-raped by 10 men in Punjab

காரில் இருந்து வெளியே இழுத்து இளம்பெண் 10 நபர்களால் பாலியல் பலாத்காரம்

காரில் இருந்து வெளியே இழுத்து இளம்பெண் 10 நபர்களால் பாலியல் பலாத்காரம்
காரில் வந்த இளம் பெண்ணை வெளியே இழுத்து 10 நபர்கள் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்து உள்ளது.
லுதியானா, 

பஞ்சாப் மாநிலம் லுதியானா மாவட்டத்தில் காரில் வந்த பெண்ணை காரில் இருந்து வெளியே இழுத்து 10  நபர்கள் பாலியல் பலாத்காரம் செய்து உள்ளனர்.

பாதிக்கப்பட்ட பெண் தனது ஆண் நண்பருடன் ஒரு காரில் லுதியானாவில் இருந்து லெஸ்வால் கிராமத்திற்கு சென்று உள்ளார். அப்போது அவரது காரை  3 மோட்டார் சைக்கிளில் மர்ம நபர்கள் விரட்டி வந்தனர்.

அந்த நபர்கள் கல்லை வீசி அந்த காரை நிறுத்தி உள்ளனர். பின்னர் காரில் இருந்து இளம் பெண்ணை வெளியே இழுத்த  கும்பல் அந்த பெண்ணை ஆள் இல்லாத  இடத்துக்கு இழுத்துச்சென்று பாலியல் பலாத்காரம் செய்து உள்ளனர். உடன் வந்த நண்பரை சிறை வைத்து உள்ளனர். 

பாதிக்கப்பட்ட பெண் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார். மருத்துவ பரிசோதனையில் பெண் பாலியல் பலாத்காரத்துக்கு உட்பட்டது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

10-க்கும் மேற்பட்டவர்கள் இந்த  செயலில் ஈடுபட்டனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

1. பாலியல் பலாத்காரம் செய்து சிறுமி கொலை: சிறுவனுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை சேலம் மகளிர் கோர்ட்டு தீர்ப்பு
பாலியல் பலாத்காரம் செய்து சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறுவனுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து சேலம் மகளிர் கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.
2. ஈரோட்டில் சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் மினிபஸ் கண்டக்டர் போக்சோ சட்டத்தில் கைது
ஈரோட்டில் சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த மினிபஸ் கண்டக்டரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
3. சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த விவசாயிக்கு 15 ஆண்டு சிறை தண்டனை பெரம்பலூர் மகிளா கோர்ட்டு தீர்ப்பு
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த விவசாயிக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பெரம்பலூர் மகிளா கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
4. 6-ம் வகுப்பு பழங்குடியின மாணவி கர்ப்பம் பலாத்கார குற்றச்சாட்டில் உடன் படித்த மாணவன் கைது
ஒடிசாவில் 6-ம் வகுப்பு படிக்கும் பழங்குடியின மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட குற்றச்சாட்டில் உடன் படித்த மாணவன் கைது செய்யப்பட்டுள்ளான்.
5. 10-ம் வகுப்பு மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம் போக்சோ சட்டத்தில் தொழிலாளி கைது
10-ம் வகுப்பு மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளியை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

ஆசிரியரின் தேர்வுகள்...