பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை மூட அரசு திட்டமிட்டுள்ளதாக வெளியான தகவல் உண்மையில்லை: பி.எஸ்.என்.எல். நிறுவனம் விளக்கம்


பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை மூட அரசு திட்டமிட்டுள்ளதாக வெளியான தகவல் உண்மையில்லை: பி.எஸ்.என்.எல். நிறுவனம் விளக்கம்
x
தினத்தந்தி 15 Feb 2019 7:42 AM GMT (Updated: 15 Feb 2019 7:42 AM GMT)

பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை மூட அரசு திட்டமிட்டுள்ளதாக வெளியான தகவல் உண்மையில்லை என்று பி.எஸ்.என்.எல். நிறுவனம் தெரிவித்து உள்ளது.

புதுடெல்லி,

தொலைத்தொடர்பு சேவைகளில் முன்னணி வகிக்கும் நிறுவனங்களில் ஒன்று பி.எஸ்.என்.எல். மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல். -ஐ அரசு மூட உள்ளதாக தகவல் பரவியது. சமூக வலைதளங்களிலும் இந்த தகவல் காட்டுத்தீ போல பரவியதால், பி.எஸ்.என்.எல் வாடிக்கையாளர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது. 

இந்த நிலையில், பி.எஸ்.என்.எல் நிறுவனம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. பி.எஸ்.என்.எல். நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- “பி.எஸ்.என்.எல் நிறுவனத்தை மூட இருப்பதாக சில ஊடகங்களில் செய்திகள் வெளியானது. இது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. தற்போதைக்கு, அரசிடம் இது போன்ற திட்டமும் பரிசீலனையில் இல்லை” என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story