அசாம் படை பிரிவுக்கு வழங்கப்பட்ட கூடுதல் அதிகாரம் நிறுத்தி வைப்பு - மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு


அசாம் படை பிரிவுக்கு வழங்கப்பட்ட கூடுதல் அதிகாரம் நிறுத்தி வைப்பு - மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு
x
தினத்தந்தி 22 Feb 2019 9:16 PM GMT (Updated: 22 Feb 2019 9:16 PM GMT)

அசாம் படை பிரிவுக்கு வழங்கப்பட்ட கூடுதல் அதிகாரத்தினை நிறுத்தி வைக்க மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

புதுடெல்லி,

வடகிழக்கு மாநிலங்களான அசாம், அருணாசலபிரதேசம், மணிப்பூர், நாகாலாந்து மற்றும் மிசோரம் மாநிலங்களில் பாதுகாப்பு பணியில் அசாம் படை முன்னணியில் உள்ளது. இந்த படையினர் இந்திய-மியான்மர் எல்லையையும் கண்காணித்து வருகிறார்கள். இந்த படையினருக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த 19-ந்தேதி குற்றவியல் நடைமுறை சட்டத்தில் திருத்தம் செய்து தனித்து செயல்படும் வகையில் கூடுதல் அதிகாரத்தை வழங்கியது.

அதன்படி அசாம் படை பிரிவினர் சந்தேகப்படும் நபர் என கருதும் யாரை வேண்டுமானாலும் கைது செய்யலாம், அவர்களது இருப்பிடங்களை எந்தவித முன் அனுமதியின்றி சோதனை நடத்தலாம் என்ற கூடுதல் அதிகாரத்தையும் வழங்கியது. தற்போது இந்த அதிகாரத்தை மத்திய அரசு தற்காலிகமாக நிறுத்தி வைத்து உள்ளது.

அசாம் படை பிரிவுக்கு கடந்த 19-ந்தேதி மத்திய அரசு வழங்கிய கூடுதல் அதிகாரம் தொடர்பாக மாநில அரசுகளுடன் கலந்தாலோசிக்க வேண்டியது இருப்பதால் மறு உத்தரவு வரும் வரை இந்த உத்தரவு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது’ என்று மத்திய உள்துறை அமைச்சக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.


Next Story