சட்டப்பிரிவு 35ஏ- க்கு எதிராக வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை?


சட்டப்பிரிவு 35ஏ- க்கு எதிராக வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை?
x
தினத்தந்தி 26 Feb 2019 1:41 AM GMT (Updated: 26 Feb 2019 1:41 AM GMT)

சட்டப்பிரிவு 35ஏ- க்கு எதிராக வழக்கு இன்று முதல் மூன்று நாட்களுக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.

புதுடெல்லி,

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க வகை செய்யும் அரசியலமைப்பு சட்டத்தின் 35-ஏ பிரிவை எதிர்த்து தொடுக்கப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்றம் இன்று முதல் மூன்று நாட்கள் (26-28) விசாரிக்க உள்ளது. சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு வர உள்ளதால், ஜம்மு காஷ்மீரில் பதற்றமான சூழல் நிலவுகிறது. இதனால், பாதுகாப்பு படையினர் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். 

ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு அந்தஸ்து மூலம், அம்மாநிலத்தில் பிற மாநிலத்தைச்சேர்ந்தவர்கள் அசையா சொத்துக்களை வாங்க முடியாது. ஜம்மு- காஷ்மீர் மாநில சட்டமன்றம் தன்னிச்சையாக சட்டங்களை இயற்றிக் கொள்ள அனுமதி அளிக்கிறது. அந்த சட்டங்கள் இந்தியாவின் மாநில மக்களை பாதிப்பதாக இருந்தாலும் அதை எதிர்த்து நீதிமன்றங்களுக்கு செல்ல முடியாது.

மெகபூபா முப்தி எச்சரிக்கை: 

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப்பிரிவு 35 ஏ ரத்து செய்யப்பட்டால், 1947 ஏற்பட்ட நிலையை விட மோசமான நிலை ஏற்படும் என்று ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரி மெகபூபா முப்தி எச்சரிக்கை விடுத்துள்ளார். 


Next Story