பிப்ரவரி மாதத்தில் ஜி.எஸ்.டி. வசூல் ரூ.97,247 கோடியாக குறைந்தது


பிப்ரவரி மாதத்தில் ஜி.எஸ்.டி. வசூல் ரூ.97,247 கோடியாக குறைந்தது
x
தினத்தந்தி 1 March 2019 6:30 PM GMT (Updated: 1 March 2019 6:14 PM GMT)

பிப்ரவரி மாதத்தில் ஜி.எஸ்.டி. வசூல் ரூ.97,247 கோடியாக குறைந்துள்ளது.

புதுடெல்லி,

சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) வசூல் பிப்ரவரி மாதத்தில் ரூ.97,247 கோடியாக இருந்தது. இதில் மத்திய ஜி.எஸ்.டி. ரூ.17,626 கோடி, மாநில ஜி.எஸ்.டி. ரூ.24,192 கோடி, ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி. ரூ.46,953 கோடி மற்றும் இதர வரியாக (செஸ்) ரூ.8,476 கோடியும் கிடைத்துள்ளது. ஜனவரி மாத ஜி.எஸ்.டி. வசூல் ரூ.1.02 லட்சம் கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

நடப்பாண்டில் மத்திய அரசின் குறைக்கப்பட்ட ஜி.எஸ்.டி. வசூல் இலக்கு ரூ.11.47 லட்சம் கோடி, இதில் பிப்ரவரி மாதம் வரை ரூ.10.70 லட்சம் கோடி வசூலாகி உள்ளது. 2019-20 ஆண்டுக்கான வசூல் இலக்கு ரூ.13.71 லட்சம் கோடி ஆகும்.


Next Story