விமானி அபிநந்தன், பாகிஸ்தானின் எப்-16 போர் விமானத்தை, ஆர்-73 ஏவுகணையை ஏவி வீழ்த்தியது எப்படி?
இந்திய விமானப் படையின் போர் விமானி அபிநந்தன், பாகிஸ்தானின் எப்-16 போர் விமானத்தை, ஆர்-73 ஏவுகணையை ஏவி வீழ்த்தியது தொடர்பாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
புதுடெல்லி
கடந்த புதன்கிழமை இந்திய வான்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் விமானப்படை விமானங்கள் விரட்டியடிக்கப்பட்டன. பாகிஸ்தான் விமானப் படையின் எப்-16 ரக போர் விமானமும் சுட்டு வீழ்த்தப்பட்டது.
இந்திய விமானப்படையின் போர் விமானி அபிநந்தன், ஆர்-73 ரக ஏவுகணையை ஏவி அந்த விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆர்-73 ரக ஏவுகணை வானில் இருந்து பாய்ந்து சென்று வானில் உள்ள இலக்கை தாக்கி அழிக்கக்கூடியதாகும். எந்த திசையில் இருந்தும், இரவு பகல் என எல்லா வேளையிலும் இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கக்கூடியதாகும்.
விமானம் மணிக்கு 2 ஆயிரத்து 500 கிலோ மீட்டர் வேகத்தில் பறந்து செல்லும்போது ஏவப்பட்டாலும், இலக்கை துல்லியமாக குறிவைத்து தாக்கக் கூடியதாகும்.
Related Tags :
Next Story