தேசிய செய்திகள்

காஷ்மீரில் தேடுதல் வேட்டையில் தீவிரவாதிகளின் பதுங்கு குழி கண்டறியப்பட்டது + "||" + A terrorist hideout busted in Shopian district

காஷ்மீரில் தேடுதல் வேட்டையில் தீவிரவாதிகளின் பதுங்கு குழி கண்டறியப்பட்டது

காஷ்மீரில் தேடுதல் வேட்டையில் தீவிரவாதிகளின் பதுங்கு குழி கண்டறியப்பட்டது
காஷ்மீரின் சோபியான் நகரில் நடந்த தேடுதல் வேட்டையில் தீவிரவாதிகளின் பதுங்கு குழி கண்டறியப்பட்டு உள்ளது.
காஷ்மீர்,

காஷ்மீரின் சோபியான் நகரில் கங்னூ என்ற கிராமத்தில் அந்நகர போலீசார் மற்றும் 44 ராஷ்டீரிய ரைபிள் படை பிரிவினர் இணைந்து தீவிரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

இந்த நிலையில், தீவிரவாதிகளின் பதுங்கு குழி ஒன்று அப்பகுதியில் கண்டறியப்பட்டு உள்ளது.  தொடர்ந்து பிற பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.  இதுபற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

காஷ்மீரில் கடந்த 14-ந் தேதி ஜெய்ஷ் இ முகமது இயக்க தீவிரவாதி இந்திய துணை ராணுவ படையினர் மீது நடத்திய தாக்குதலில் 40 வீரர்கள் கொல்லப்பட்டனர்.

காஷ்மீரில் தொடர்ந்து தீவிரவாதிகள் பதுங்கி இருந்து பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.  இதனை எதிர்கொள்ள பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுத்து வருகின்றனர்.  இந்நிலையில், தீவிரவாதிகளின் பதுங்கு குழி ஒன்று சோபியான் நகரில் கண்டறியப்பட்டு அதுபற்றி விசாரணை நடந்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. காஷ்மீரில் தேடுதல் வேட்டையில் 4 பயங்கரவாதிகள் சுட்டு கொலை
காஷ்மீரில் தேடுதல் வேட்டையில் 4 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர்.
2. ஆப்கானிஸ்தானில் ராணுவ வேட்டை; 2 தலீபான் தலைவர்கள் உள்பட 52 தீவிரவாதிகள் பலி
ஆப்கானிஸ்தானில் 2 தலீபான் தலைவர்கள் உள்பட 52 தீவிரவாதிகள் கொல்லப்பட்டு உள்ளனர்.
3. இலங்கையில் தீவிரவாதிகள் தாக்குதல் எதிரொலி: ஊட்டி தங்கும் விடுதிகளில் போலீசார் சோதனை
இலங்கையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதின் எதிரொலியாக ஊட்டியில் உள்ள தங்கும் விடுதிகளில் போலீசார் விடிய, விடிய சோதனை நடத்தினர்.
4. காஷ்மீரில் பாதுகாப்பு படை அதிரடியில் 2 தீவிரவாதிகள் சுட்டு கொலை
காஷ்மீரில் பாதுகாப்பு படையினரின் அதிரடி சண்டையில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
5. காஷ்மீரில் நடந்த என்கவுண்டரில் 2 தீவிரவாதிகள் சுட்டு கொலை
ஜம்மு மற்றும் காஷ்மீரில் பத்காம் பகுதியில் நடந்த என்கவுண்டரில் 2 தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர்.