அய்யப்பன் பெயரில் ஓட்டு கேட்கக்கூடாது - கேரள தலைமை தேர்தல் அதிகாரி அறிவுறுத்தல்


அய்யப்பன் பெயரில் ஓட்டு கேட்கக்கூடாது - கேரள தலைமை தேர்தல் அதிகாரி அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 13 March 2019 10:15 PM GMT (Updated: 13 March 2019 8:54 PM GMT)

அய்யப்பன் பெயரில் ஓட்டு கேட்கக்கூடாது என கேரள தலைமை தேர்தல் அதிகாரி அறிவுறுத்தி உள்ளார்.

திருவனந்தபுரம்,

சபரிமலை அய்யப்பன் கோவிலில் எல்லா வயது பெண்களையும் அனுமதிக்க மாநில அரசு எடுத்த முடிவால் மாநிலமே போராட்டக்களமானது. இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தலையொட்டி, திருவனந்தபுரத்தில் நேற்று அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய அம்மாநில தலைமை தேர்தல் அதிகாரி டீக்காராம் மீனா பேசியதாவது:-

சபரிமலை என்பது மத வழிபாட்டு தலம். எனவே, கோவில் பெயரிலோ, மசூதி பெயரிலோ யாராவது ஓட்டு கேட்டால், அது தேர்தல் நடத்தை விதிமீறல் ஆகும்.

அய்யப்பன் பெயரில் ஓட்டு கேட்பதை அரசியல் கட்சிகள் தவிர்க்க வேண்டும். சபரிமலை பிரச்சினையை எந்த அளவுக்கு பிரசாரத்தில் பயன்படுத்தலாம் என்பதை முடிவு செய்வதில் கட்சிகள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story