சசிதரூர் உறவினர்கள் பா.ஜனதாவில் இணைந்தனர்


சசிதரூர் உறவினர்கள் பா.ஜனதாவில் இணைந்தனர்
x
தினத்தந்தி 17 March 2019 2:34 AM IST (Updated: 17 March 2019 2:34 AM IST)
t-max-icont-min-icon

சசிதரூர் உறவினர்கள் இரண்டு பேர் பா.ஜனதாவில் இணைந்தனர்.

கொச்சி,

கேரளா மாநிலம் திருவனந்தபுரம் எம்.பி.யாக காங்கிரசை சேர்ந்த சசிதரூர் உள்ளார். இவர் பாலக்காடு அரச குடும்பத்தைச் சேர்ந்தவர் ஆவார். வருகிற நாடாளுமன்ற தேர்தலிலும் காங்கிரஸ் சார்பில் இவர்தான் திருவனந்தபுரம் தொகுதியில் மீண்டும் போட்டியிடுவார் என தெரிகிறது.

இந்தநிலையில் சசிதரூரின் அத்தை சோபனா, அவருடைய கணவர் சசிக்குமார் ஆகிய இருவரும் பா.ஜனதாவில் சேர்ந்தனர். கேரளா மாநிலத் தலைவர் ஸ்ரீதரன் பிள்ளை தலைமையில் கொச்சியில் நடந்த நிகழ்ச்சியில் அவர்கள் பா.ஜனதாவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

சோனியாகாந்தியின் உதவியாளராக இருந்த டாம் வடக்கன் சமீபத்தில் பா.ஜனதாவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story