மொசாம்பிக்கில் புயல் பாதிப்பு: மீட்பு பணியில் 3 இந்திய கப்பல்கள் - 200 பேர் மீட்பு


மொசாம்பிக்கில் புயல் பாதிப்பு: மீட்பு பணியில் 3 இந்திய கப்பல்கள் - 200 பேர் மீட்பு
x
தினத்தந்தி 25 March 2019 8:00 PM GMT (Updated: 25 March 2019 8:00 PM GMT)

மொசாம்பிக்கில் புயல் பாதித்த பகுதிகளில், மீட்பு பணியில் 3 இந்திய கப்பல்கள் ஈடுபட்டுள்ளன.

புதுடெல்லி,

கடந்த 15-ந்தேதி, ஆப்பிரிக்க நாடுகளான மொசாம்பிக், ஜிம்பாப்வே, மலாவி ஆகிய நாடுகளை ‘எல்டாய்’ புயல் தாக்கியது. இதனால், ஏராளமான உயிர்ச்சேதமும், பொருட்சேதமும் ஏற்பட்டன.

மொசாம்பிக் நாட்டின் வேண்டுகோளை ஏற்று, இந்தியா தனது 3 கடற்படை கப்பல்களை மொசாம்பிக் நாட்டுக்கு அனுப்பி வைத்துள்ளது. அக்கப்பல்கள் அங்கு மீட்பு மற்றும் நிவாரண பணியில் ஈடுபட்டுள்ளன. சுமார் 200 பேரை மீட்டுள்ளன. இந்திய கடற்படை சார்பில் அமைக்கப்பட்ட மருத்துவ முகாமில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு மருத்துவ உதவி அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், நிவாரண பொருட்களுடன் மற்றொரு கப்பலை இந்தியா அனுப்பி வைத்துள்ளது.

Next Story