ஸ்ரீநகர்-ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில் பொதுபோக்குவரத்துக்கு கட்டுப்பாட்டு: எதிர்க்கட்சிகள் போராட்டம்
ஜம்மு காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகர்-ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில் பொதுபோக்குவரத்துக்கு கட்டுப்பாட்டு கொண்டு வந்ததற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
ஸ்ரீநகர்,
கடந்த பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி புல்வாமாவில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையைச் சேர்ந்த 40 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானிலிருந்து செயல்பட்டு வரும் ஜெய்ஷ்இமுகமது அமைப்பு பொறுப்பேற்றது.
இந்த தாக்குதலுக்கு பாதுகாப்பு கருதி ஜம்முஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்களின் போக்குவரத்துக்கு கட்டுப்பாடுகளை அம்மாநில அரசு விதித்துள்ளது. அதன்படி, வாரத்தில் ஞாயிறு மற்றும் புதன்கிழமைகளில் உதம்பூர் முதல் பாராமுல்லா வரையிலான ஜம்முகாஷ்மீர் தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்களின் வாகன போக்குவரத்துக்கு தடை விதிப்பதாக அம்மாநில அரசு அறிவித்தது.
இந்த தேசிய நெடுஞ்சாலையை மக்களவை தேர்தல் பணிக்காக பாதுகாப்பு படைகள் பயன்படுத்தும் என்பதால் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக கூறப்பட்டது. மேலும், இந்த பொதுப் போக்குவரத்துக்கான தடை உத்தரவு மே 31ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஜம்முகாஷ்மீர் மாநில அரசின் இந்த உத்தரவுக்கு முக்கிய எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்து ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டன.
அரசின் இந்த உத்தரவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா வலியுறுத்தியுள்ளார். அதேபோன்று, பிடிபி கட்சியின் தலைவர் மெஹபூபா முப்தியும் அரசின் இந்த முடிவு தவறானது என விமர்சித்துள்ளார்
Related Tags :
Next Story