தேசிய செய்திகள்

பெண்களை மிகவும் கீழ்த்தரமாக பேசிய திமுக பேச்சாளருக்கு காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு கண்டனம் + "||" + kushboo slams DMK speaker

பெண்களை மிகவும் கீழ்த்தரமாக பேசிய திமுக பேச்சாளருக்கு காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு கண்டனம்

பெண்களை மிகவும் கீழ்த்தரமாக பேசிய திமுக பேச்சாளருக்கு காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு கண்டனம்
பெண்களை மிகவும் கீழ்த்தரமாக பேசிய திமுக பேச்சாளருக்கு காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் திமுக - காங்கிரஸ் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. பிரசாரம் தீவிரமாக நடக்கிறது. தென்சென்னையில் நடைபெற்ற திமுக சார்பான பொதுக்கூட்டம் ஒன்றில் பேச்சாளர் ஒருவர் பேசிய வீடியோ வைரலாக பரவியது. அவருடைய பேச்சுக்கள் அனைத்தும் மிகவும் கீழ்தரமானவையாக இருந்தது. இதனால் யூடியுப்பில் இருந்து நீக்கப்பட்டது. சிறு, சிறு வீடியோக்கள் டுவிட்டரில் வெளியானது. இதுதொடர்பான சிறு வீடியோவை இணைத்துள்ளவர், குஷ்புவின் அரையை வாங்க தகுதியானவர் என பதிவிட்டிருந்தார்.

வீடியோ தொடர்பாக கருத்தை பதிவு செய்துள்ள காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் குஷ்பு கடும் கண்டனங்களை பதிவு செய்துள்ளார். இதுதொடர்பான வீடியோ வெளியான டுவிட்டை இணைத்து திமுக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். 
 
'மிகவும் மோசமான... ஏற்றுக்கொள்ள முடியாத, வெட்க கரமான பேச்சாகும். தாங்கள் சொல்வதை நிரூபிக்க ஏன் ஆண்கள் இவ்வளவு தரம் தாழ்ந்து போக வேண்டும் என்று யோசிக்கிறேன். அவர்கள் வீட்டுப் பெண்களைப் பற்றி இதே போன்ற வார்த்தைகளை அவர்கள் கண்டிப்பாக கேட்க விரும்ப மாட்டார்கள். திமுக உடனடியாக இதைப் பார்த்து உடனடி நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறேன் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. வயதாகும்போது எப்படி இருப்பார்கள்? குஷ்பு, சுருதிஹாசன் வெளியிட்ட புகைப்படங்கள்
சமூக வலைத்தளத்தில் இப்போது ‘ஓல்டு பேஸ் சேலஞ்ச்’ வைரலாகி வருகிறது.
2. `சின்னதம்பி' ரீமேக் ஆகுமா?
பிரபு-குஷ்பு ஜோடியாக நடித்து, பி.வாசு டைரக்‌ஷனில் வெளிவந்த `சின்னதம்பி' படம், ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.
3. மோடியை மட்டும் நம்பி உள்ள பா.ஜனதா கட்சி தேர்தலுக்கு பிறகு காணாமல் போகும் நடிகை குஷ்பு பேட்டி
மோடியை நம்பி மட்டும் உள்ள பா.ஜனதா கட்சி தேர்தலுக்கு பிறகு காணாமல் போகும் என்று நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.
4. பெண்களுக்கான பாதுகாப்பை ராகுல்காந்தி தான் தர முடியும் குஷ்பு பேச்சு
பெண்களுக்கான பாதுகாப்பை ராகுல்காந்தியால்தான் தர முடியும் என்று காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செய்தி தொடர்பாளர் குஷ்பு கூறினார்.