மசூதிகளில் பெண்கள் தொழுகை நடத்த அனுமதிக்க கோரி மனு: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்


மசூதிகளில் பெண்கள் தொழுகை நடத்த அனுமதிக்க கோரி மனு: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
x
தினத்தந்தி 16 April 2019 1:51 PM IST (Updated: 16 April 2019 1:51 PM IST)
t-max-icont-min-icon

மசூதிகளில் பெண்கள் தொழுகை நடத்த அனுமதிக்க கோரி தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது.

புதுடெல்லி,

மசூதிகளில் முஸ்லீம் பெண்கள் தொழுகை நடத்த அனுமதிக்க கோரி தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம் மத்திய அரசு பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. புனேவை சேர்ந்த தம்பதியினர் இந்த மனுவை தாக்கல் செய்தனர். 

சபரிமலை வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த ஒரே காரணத்துக்காக மட்டுமே இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக நீதிபதிகள் தெரிவித்தனர். 

Next Story