நிலவில் விவசாயிகளுக்கு நிலம் கொடுப்பதாக ராகுல் காந்தி சொன்னாரா?


நிலவில் விவசாயிகளுக்கு நிலம் கொடுப்பதாக ராகுல் காந்தி சொன்னாரா?
x
தினத்தந்தி 19 April 2019 8:46 AM GMT (Updated: 19 April 2019 10:20 AM GMT)

நிலவில் விவசாயிகளுக்கு நிலம் கொடுப்பதாக ராகுல் காந்தி சொன்னாரா? சமூக வலைதளங்களில் போலி வீடியோ வைரலாகி வருகிறது.

 ராகுல்காந்தி  பேசுவது போன்ற வீடியோ ஒன்று பல்வேறு வலதுசாரி பேஸ்புக் குழுக்களிலும், ட்விட்டரிலும் வைரலாகி வருகிறது 

"இங்குள்ள விவசாய நிலங்களில் உங்களால் சம்பாதிக்க முடியாது. நிலவை பாருங்கள், அங்கு நீங்கள் விவசாயம் செய்வதற்கான நிலத்தை அளிக்கிறேன். எதிர்காலத்தில் நீங்கள் அங்கு உருளை கிழங்குகளை பயிரிடுவீர்கள். நான் அங்கு இயந்திரம் ஒன்றை வைத்து, அதன் மூலம் உருளை கிழங்கை குஜராத்திற்கு கொண்டு வருவேன்" என்று பேசுவது போன்றுள்ளது.

"தயவுசெய்து யாராவது இவரை நிறுத்துங்கள். விவசாய நிலத்தை நிலவில் ஏற்படுத்தி தருவேனென்று அவர் கூறுகிறார்" என்ற விளக்கத்தோடு, 'டீம் மோதி 2019" மற்றும் "நமோ அகைன்" போன்ற சமூக வலைதளங்களில் இந்த வீடியோ பதிவிடப்பட்டு உள்ளது.

பாரதீய ஜனதா ஆதரவு வலைதளங்களில் இதுபோன்ற வீடியோ பதிவிடப்பட்டு உள்ளது.

ராகுல் காந்தியின் இது தொடர்பான அசல்  வீடியோவின் பேச்சு 2017 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ராகுல் காந்தியின் அதிகாரப்பூர்வ YouTube சேனலில் பதிவேற்றப்பட்டு உள்ளது. அதனை எடிட் செய்து இத்தகைய போலி வீடியோ வெளியிடப்பட்டு உள்ளது. அசல் வீடியோவில் பிரதமர் நரேந்திர மோடி விவசாயிகளுக்கு நம்பகத்தன்மையற்ற உறுதிமொழிகள் அளித்து உள்ளார் என்பதை  அவர் விவரிக்கிறார்.

Next Story