நியாய் திட்டம்: புதிய வரிகள் விதிக்க அவசியமில்லை - மன்மோகன் சிங்
நியாய் திட்டத்தை செயல்படுத்தும் போது நடுத்தர வர்க்கத்தினர் மீது வரிகள் ஏதும் விதிக்கப்படாது என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
குஜராத் மாநிலம் பஜிபுரா பகுதியில் காங்கிரஸ் பொதுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் காங்கிரஸ் வேட்பாளர் துஷார் சவுத்ரியை ஆதரித்து ராகுல் காந்தி பேசினார். அப்போது பிரதமர் நரேந்திர மோடி அரசு கொண்டு வந்த பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி வரிவிதிப்பு நடவடிக்கைகளால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டது.
அந்தப் பாதிப்பில் இருந்து காங்கிரஸ் கட்சியின் ‘நியாய்’ திட்டம் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும், நாட்டில் வேலைவாய்ப்புகளை உருவாக்கும். நியாய்’ திட்டத்தின் கீழ் ஏழைமக்களுக்கு ஆண்டுக்கு ரூ.72ஆயிரம் வழங்குவோம் என்று நாங்கள் உறுதி அளித்திருக்கிறோம் என்றார்.
காங்கிரஸ் கட்சியின் நியாய் திட்டம் குறித்து முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,
நியாய் திட்டத்தை செயல்படுத்தும் போது நடுத்தர வர்க்கத்தினர் மீது வரிகள் ஏதும் விதிக்கப்படாது. திட்டத்தை செயல்படுத்தும் போது மொத்த உற்பத்தியில் 1.2% முதல் 1.5% வரை மட்டுமே செலவாகும். வல்லுநர்களுடன் கலந்து ஆலோசித்தே நியாய் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. வெற்றிகரமாக நியாய் திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வர முடியும் என்று கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story