சபரிமலை கோவிலில் தமிழக பெண் உள்பட 2 பேர் நுழைய முயற்சி


சபரிமலை கோவிலில் தமிழக பெண் உள்பட 2 பேர் நுழைய முயற்சி
x
தினத்தந்தி 16 May 2019 6:35 AM IST (Updated: 16 May 2019 6:35 AM IST)
t-max-icont-min-icon

சபரிமலை கோவிலில் நுழைய முயன்ற தமிழக பெண் உள்பட 2 பேர் இந்து அமைப்புகளின் எதிர்ப்பால் கைவிட்டனர்.

சபரிமலை,

சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது. இதற்கு இந்து அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் கோவிலுக்குள் பெண்கள் நுழைய விடாமல் தடுத்தனர். இந்த பரபரப்பு சில நாட்களாக அடங்கி அங்கு அமைதி நிலவியது.

இந்நிலையில் சபரிமலை கோவிலுக்கு தமிழகத்தை சேர்ந்தவர் உள்பட 2 பெண்கள் நேற்று நுழைய முயற்சி செய்தனர். ஆனால் அங்குள்ள பஜ்ரங்தள் உள்ளிட்ட இந்து அமைப்புகள் எதிர்ப்பால் அவர்கள் தங்கள் முயற்சியை கைவிட்டு திரும்பினர். இதனால் அங்கு மீண்டும் பரபரப்பு நிலவி வருகிறது.

Next Story