தேசிய செய்திகள்

டெல்லியில் காங்கிரஸ் கூட்டணி கட்சி கூட்டத்தில் பங்கேற்க ஸ்டாலினுக்கு அழைப்பு + "||" + Calling Stalin to attend Congress coalition party meeting in Delhi

டெல்லியில் காங்கிரஸ் கூட்டணி கட்சி கூட்டத்தில் பங்கேற்க ஸ்டாலினுக்கு அழைப்பு

டெல்லியில் காங்கிரஸ் கூட்டணி கட்சி கூட்டத்தில் பங்கேற்க ஸ்டாலினுக்கு அழைப்பு
டெல்லியில் காங்கிரஸ் கூட்டணி கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் கூட்டத்தில் பங்கேற்க ஸ்டாலினுக்கு அழைப்பு விடப்பட்டு உள்ளது.
புதுடெல்லி,

நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது.  இதுவரை 6 கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ளது.  வருகிற 19ந்தேதி இறுதி கட்ட தேர்தல் நடைபெறும்.  இதற்கான பணிகளில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டு வருகிறது.  அரசியல் கட்சிகளும் ஓட்டு சேகரிக்கும் பணியில் தீவிரமுடன் ஈடுபட்டுள்ளன.  ஓட்டு எண்ணிக்கை மே 23ந்தேதி நடைபெறும்.

இந்த நிலையில், வருகிற 23ந்தேதி மாலை டெல்லியில் காங்கிரஸ் கூட்டணி கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் கூட்டம் நடைபெறுகிறது.  இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு அழைப்பு விடப்பட்டு உள்ளது.  அவர் கூட்டத்தில் பங்கேற்கும்படி காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. செல்பி எடுக்க அழைத்து கார்த்தியை கோபப்படுத்திய கஸ்தூரி
செல்பி எடுக்க அழைத்து கார்த்தியை நடிகை கஸ்தூரி கோபமடையச் செய்தார்.