தேசிய செய்திகள்

கறைபடியாத கரம் கொண்டவர் மோடி என்று கூறியதை தவறு என்று நாங்கள் அம்பலப்படுத்தி உள்ளோம்- ராகுல்காந்தி + "||" + Modi has a hard Karam That said We have exposed the mistake-  Rahul Gandhi

கறைபடியாத கரம் கொண்டவர் மோடி என்று கூறியதை தவறு என்று நாங்கள் அம்பலப்படுத்தி உள்ளோம்- ராகுல்காந்தி

கறைபடியாத கரம் கொண்டவர் மோடி என்று கூறியதை தவறு என்று நாங்கள் அம்பலப்படுத்தி உள்ளோம்- ராகுல்காந்தி
கறைபடியாத கரம் கொண்டவர் மோடி என்று கூறியதை தவறு என்பதை நாங்கள் அம்பலப்படுத்தி உள்ளோம் என் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கூறி உள்ளார்.
புதுடெல்லி

டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

* பல்வேறு விவகாரங்களில் பிரதமர் மோடி வெளிப்படையாக பதில் அளிக்கவில்லை. 

* தேர்தலில் மோடியும் அமித்ஷாவும்  மிகப்பெரிய அளவில் பணத்தை  செலவு செய்து உள்ளனர்.

* மக்களின் முடிவே எங்களின் முடிவாக இருக்கும். பாஜகவிடம் உள்ள பணத்திற்கும் எங்கள் பக்கம் உள்ள உண்மைக்கும் தான் இந்த தேர்தலில் போட்டி. 

*  தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்பட்டு உள்ளது. தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளை மக்கள் உற்று நோக்குகிறார்கள். மோடி என்ன பேசினாலும் தேர்தல் ஆணையம் கண்டுகொள்வதில்லை. மக்கள் தீர்ப்பிற்கு தலைவணங்க காத்திருக்கிறோம்.

அரசியல் விவகாரம் குறித்து பிரதமர் மோடி, என்னுடன் ஏன் விவாதம் நடத்த வில்லை?

* பிரதமர் மோடியின் குடும்பத்தை நான் மதிக்கிறேன்.  எனது குடும்பத்தை மோடி விமர்சித்ததை பற்றி கவலைப்படவில்லை.

* கறைபடியாத கரம் கொண்டவர் மோடி என்று கூறியதை தவறு என்று நாங்கள் அம்பலப்படுத்தினோம்.

* தேர்தல் முடிய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் மோடி செய்தியாளர்களைச் சந்திக்கிறார். அவரது செய்தியாளர்கள் சந்திப்பை நான் பாராட்டுகிறேன் என கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. சென்னை ராணிமேரி கல்லூரியில் உள்ள வாக்குஎண்ணும் மையத்தில் காவல் ஆணையர் விஸ்வநாதன் ஆய்வு
சென்னை ராணிமேரி கல்லூரியில் உள்ள வாக்குஎண்ணும் மையத்தில் காவல் ஆணையர் விஸ்வநாதன் ஆய்வு மேற்கொண்டார்.
2. தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது; புகார் மனு அளித்த பின் எதிர்கட்சி தலைவர்கள் கூட்டாக பேட்டி
தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என்று எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகள் கூட்டாக கூறினர்.
3. மக்களவைத் தேர்தலில் கடந்த தேர்தலைவிட அதிக வாக்குகள் பதிவாகியுள்ளது -தலைமை தேர்தல் ஆணையம்
மக்களவைத் தேர்தலில் ஏழு கட்ட வாக்குப்பதிவை சேர்த்து மொத்தம் 67.11 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது என தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
4. வாக்கு எண்ணிக்கை நேர்மையாக, நியாயமாக நடைபெற நடவடிக்கை எடுக்க கோரி தமிழக தேர்தல் அதிகாரியிடம் திமுக மனு
வாக்கு எண்ணிக்கை நேர்மையாக, நியாயமாக நடைபெற நடவடிக்கை எடுக்க கோரி தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவிடம், திமுக சார்பில் மனு அளிக்கப்பட்டு உள்ளது.
5. பாராளுமன்ற தேர்தல் 2019: உலகின் மிக உயரமான வாக்குச்சாவடியில் 143% வாக்குப்பதிவு
இமாச்சலப்பிரதேசம் மாநிலத்தின் தாஷிகேங் பகுதியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடி உலகிலேயே உயரமானது என்று அறியப்பட்ட நிலையில், தேர்தலில் அங்கு விநோதமாக 143 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளது.