தேசிய செய்திகள்

பா.ஜனதா வேட்பாளர் பிரக்யாசிங் குறித்து அவதூறு கருத்து - பேஸ்புக்கில் பதிவிட்ட டாக்டர் கைது + "||" + Commenting on BJP candidate Pragya Singh - The doctor who posted on Facebook has been arrested

பா.ஜனதா வேட்பாளர் பிரக்யாசிங் குறித்து அவதூறு கருத்து - பேஸ்புக்கில் பதிவிட்ட டாக்டர் கைது

பா.ஜனதா வேட்பாளர் பிரக்யாசிங் குறித்து அவதூறு கருத்து - பேஸ்புக்கில் பதிவிட்ட டாக்டர் கைது
பா.ஜனதா வேட்பாளர் பிரக்யாசிங் குறித்து அவதூறு கருத்தினை பேஸ்புக்கில் பதிவிட்ட டாக்டர் கைது செய்யப்பட்டார்.
மும்பை,

மராட்டிய மாநிலம் மாலேகாவ் குண்டுவெடிப்பு சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டவர் பெண் சாமியார் பிரக்யாசிங். இவர் நாடாளுமன்ற தேர்தலில் போபால் தொகுதியில் பா.ஜனதா சார்பில் போட்டியிட்டார்.

இந்தநிலையில், மும்பை விக்ரோலியை சேர்ந்த ஹோமியோபதி டாக்டர் சுனில்குமார் நிஷாத் (வயது 38) என்பவர் கடந்த சில தினங்களுக்கு முன் பெண் சாமியார் பிரக்யாசிங் குறித்தும், இந்து மதம் மற்றும் பிராமண சமுதாயம் குறித்தும் அவதூறு கருத்துகளை தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார்.


இதுபற்றி ரவீந்திர திவாரி என்பவர், போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுனில்குமார் நிஷாத்தை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. பா.ஜனதா வேட்பாளர் பிரக்யாசிங் குறித்து அவதூறு கருத்து பேஸ்புக்கில் பதிவிட்ட டாக்டர் கைது
பெண் சாமியாரும், பா.ஜனதா வேட்பாளருமான பிரக்யாசிங் குறித்து பேஸ்புக்கில் அவதூறு கருத்து பதிவிட்ட டாக்டர் கைது செய்யப்பட்டார்.