உடல் நலக்குறைவு: அருண் ஜெட்லி மீண்டும் மந்திரி ஆகமாட்டார்


உடல் நலக்குறைவு: அருண் ஜெட்லி மீண்டும் மந்திரி ஆகமாட்டார்
x
தினத்தந்தி 24 May 2019 9:46 PM GMT (Updated: 24 May 2019 9:46 PM GMT)

உடல் நலக்குறைவு காரணமாக அருண் ஜெட்லி மீண்டும் மந்திரி ஆகமாட்டார் என தகவல் வெளியாகி உள்ளது.

புதுடெல்லி,

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசில் நிதி மந்திரியாக இருப்பவர் அருண் ஜெட்லி (வயது 66). கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வரும் அவரை அமெரிக்கா அல்லது இங்கிலாந்தில் சிகிச்சை எடுத்துக் கொள்ளுமாறு டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

தற்போது மோடி தலைமையில் மீண்டும் புதிய அரசு அமைய இருக்கும் நிலையில், அதில் மந்திரி பதவி எதுவும் ஏற்க ஜெட்லி விரும்பவில்லை என அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்து உள்ளனர். இதைப்போல இலாகா இல்லாத மந்திரி போன்ற எந்த பொறுப்பையும் அவர் ஏற்க விரும்பவில்லை எனவும் பா.ஜனதா தலைமைக்கு தெரிவித்து விட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.


Next Story