தேசிய செய்திகள்

பா.ஜனதா இன்னும் வெற்றியின் உச்சத்தை தொடவில்லை : அமித் ஷா சொல்கிறார் + "||" + Amith Shah says that BJP does not touch the peak of success

பா.ஜனதா இன்னும் வெற்றியின் உச்சத்தை தொடவில்லை : அமித் ஷா சொல்கிறார்

பா.ஜனதா இன்னும் வெற்றியின் உச்சத்தை தொடவில்லை : அமித் ஷா சொல்கிறார்
303 தொகுதிகளை கைப்பற்றி இருந்தாலும், பா.ஜனதா இன்னும் வெற்றியின் உச்சத்தை தொடவில்லை என்று அமித் ஷா கூறியுள்ளார்.

புதுடெல்லி, 

மாநில பா.ஜனதா தலைவர்கள், நிர்வாகிகள் கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது. அதில், பா.ஜனதா தேசிய தலைவரும், மத்திய உள்துறை மந்திரியுமான அமித் ஷா கலந்துகொண்டு, நிர்வாகிகளிடையே பேசினார்.

அப்போது அவர், ‘‘நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா 303 தொகுதிகளை கைப்பற்றி இருக்கிறது. இருந்தாலும், பா.ஜனதா தனது வெற்றியின் உச்சத்தை இன்னும் தொடவில்லை. கட்சியின் அங்கமாக இல்லாத, கட்சியின் நலத்திட்டங்களை அனுபவிக்காத அனைத்து தரப்பு மக்களையும் எட்டும்வகையில் பா.ஜனதாவினர் இன்னும் கடுமையாக பணியாற்ற வேண்டும்’’ என்று பேசினார்.

பா.ஜனதா புதிய உறுப்பினர் சேர்க்கை பணியை அமித் ஷா தொடங்கிவைத்தார். உறுப்பினர் சேர்க்கையை கண்காணிக்கும் குழுவின் அமைப்பாளராக முன்னாள் முதல்–மந்திரி சிவராஜ் சிங் சவுகானை நியமித்தார்.

டிசம்பர் மாதம்வரை, பா.ஜனதா தலைவராக அமித் ஷா நீடிப்பார் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த கூட்டத்துக்கு பிறகு, பா.ஜனதா பொதுச்செயலாளர் புபேந்தர் யாதவ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:–

பிரதமர் மோடியின் தலைமைக்காகவும், மத்திய அரசின் சிறந்த செயல்பாட்டுக்காகவும், கட்சி ஊழியர்களின் கடும் உழைப்புக்காகவும் இந்த வெற்றி கிடைத்துள்ளது.

16 மாநிலங்களில் 50 சதவீதத்துக்கு மேற்பட்ட ஓட்டுகளை பா.ஜனதா பெற்றுள்ளது. 200 தொகுதிகளில் பா.ஜனதாவின் வெற்றி வித்தியாசம் அதிகமாக உள்ளது. இந்த தேர்தலில் சாதியமும், குடும்ப அரசியலும் வீழ்த்தப்பட்டுள்ளது.

கடந்த 2014–ம் ஆண்டு தேர்தல் வெற்றிக்கு பிறகும், பா.ஜனதா இன்னும் வெற்றியின் உச்சத்தை தொடவில்லை என்று அமித் ஷா கூறினார். இப்போதும் அதையே கூறியுள்ளார்.

கடந்த 2014–ம் ஆண்டுக்கு பிறகு, பா.ஜனதா உறுப்பினர்கள் எண்ணிக்கை 11 கோடியாக அதிகரித்தது. இப்போது, புதிய உறுப்பினர் சேர்க்கை தொடங்கி உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


தொடர்புடைய செய்திகள்

1. காஷ்மீர் விவகாரம்: காங்கிரஸ் அரசியல் கண்ணோட்டத்தோடு பார்க்கிறது, பாஜக தேசபக்தியாக பார்க்கிறது - அமித் ஷா
காஷ்மீர் விவகாரத்தை காங்கிரஸ் கட்சி அரசியல் கண்ணோட்டத்தோடு பார்க்கிறது. ஆனால் பாஜக அதனை தேசபக்தியாக பார்க்கிறது என்று உள்துறை மந்திரி அமித் ஷா தெரிவித்தார்.
2. நாடு முழுவதிலும் இருந்து சட்டவிரோத குடியேறிகளை வெளியேற்றுவோம்; அமித் ஷா பரபரப்பு பேச்சு
நாடு முழுவதிலும் இருந்து அனைத்து சட்டவிரோத குடியேறிகளை வெளியேற்றுவோம் என மத்திய மந்திரி அமித் ஷா பேசியுள்ளது பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது.
3. உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறிய அறுவை சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பினார்
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிறிய அறுவை சிகிச்சை நடந்தது.
4. ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து - உள்துறை அமைச்சர் அமித்ஷா
ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370, 35 ஏ சட்டப்பிரிவு ரத்து என உள்துறை அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில் அறிவித்தார்.
5. மோடி, ஒரு உன்னதமான சீர்திருத்தவாதி
வரலாற்றில் சில தினங்கள் நிலைத்து நின்றுவிடும். அந்த வகையில் இந்திய நாடாளுமன்றத்தின் நீண்டகால வரலாற்றில் இந்த ஆண்டு ஜூலை 30-ந் தேதி நிலைத்துவிட்டது.