சந்திராயன் 2 திட்டத்திற்கு காங்., ஆட்சியில் ஒத்துழைப்பு கிடைக்கவில்லை -மாதவன் நாயர்


சந்திராயன் 2 திட்டத்திற்கு காங்., ஆட்சியில் ஒத்துழைப்பு கிடைக்கவில்லை -மாதவன் நாயர்
x
தினத்தந்தி 14 Jun 2019 4:36 PM IST (Updated: 14 Jun 2019 4:36 PM IST)
t-max-icont-min-icon

சந்திராயன் 2 திட்டத்திற்கு காங்கிரஸ் ஆட்சியில் ஒத்துழைப்பு கிடைக்கவில்லை என இஸ்ரோ முன்னாள் தலைவர் மாதவன் நாயர் கூறி உள்ளார்.

புதுடெல்லி

சந்திராயன்-2 திட்டத்தை 2012-ம் ஆண்டே செயல்படுத்த முயன்றதாகவும் ஆனால் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசிடம் இருந்து இஸ்ரோவிற்கு ஒத்துழைப்பு கிடைக்கவில்லை என்று அதன் முன்னாள் தலைவரும் தற்போது பாஜகவில் இணைந்துள்ளவருமான மாதவன் நாயர் கூறியுள்ளார்.

2008-ம் ஆண்டு அக்டோபர் 22-ம் தேதி சந்திராயன்  திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதை அடுத்து சந்திராயன்-2 திட்டத்தை 2012-ம் ஆண்டு செயல்படுத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் ஆயத்தமானதாகவும் ஆனால் 2014 மக்களவைத் தேர்தலைக் கருத்தில் கொண்டு சந்திராயன்-2 திட்டத்திற்கு அப்போதைய மத்திய அரசு ஒத்துழைக்கவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

சந்திராயன்-2 திட்டத்திற்கு பதில் மங்கள்யான் திட்டத்தை நிறைவேற்றுமாறு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் அழுத்தம் கொடுக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

Next Story