‘நிதி ஆயோக்’ முன்னாள் தலைவர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு சிக்கல்: ஊழல் கண்காணிப்பு ஆணையம் வழக்கு தொடர முடிவு


‘நிதி ஆயோக்’ முன்னாள் தலைவர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு சிக்கல்: ஊழல் கண்காணிப்பு ஆணையம் வழக்கு தொடர முடிவு
x
தினத்தந்தி 21 Jun 2019 9:30 PM GMT (Updated: 21 Jun 2019 9:20 PM GMT)

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு விவகாரத்தில், ‘நிதி ஆயோக்’ முன்னாள் தலைவர் உள்ளிட்ட அதிகாரிகள் மீது ஊழல் கண்காணிப்பு ஆணையம் வழக்கு தொடர முடிவு செய்துள்ளது.

புதுடெல்லி,

முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம், அவருடைய மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் சம்பந்தப்பட்ட ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தியபோது, சில முன்னாள், இந்நாள் அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதை சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் கண்டுபிடித்தன.

இதையடுத்து, இவ்விவகாரத்தில், நிதி ஆயோக் முன்னாள் தலைமை செயல் அதிகாரி சிந்துஸ்ரீ குள்ளார், சிறு, குறு தொழில் அமைச்சக முன்னாள் செயலாளர் அனுப் கே.பூஜாரி, பொருளாதார விவகாரத்துறை முன்னாள் செயலாளர் ரவீந்திர பிரசாத் உள்ளிட்ட அதிகாரிகள் மீது வழக்கு தொடர மத்திய நிதி, மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகங்களிடம் ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணையம் அனுமதி கோரியுள்ளது.

Next Story