தேசிய செய்திகள்

மே மாதம் 2.35 கோடி பேர் பயன்படுத்தினர்: இந்த ஆண்டுக்குள் 4,791 ரெயில் நிலையங்களில் இலவச ‘வை-பை’ + "||" + 2.35 crore users used in May: 4,791 railway stations free Wi-Fi this year

மே மாதம் 2.35 கோடி பேர் பயன்படுத்தினர்: இந்த ஆண்டுக்குள் 4,791 ரெயில் நிலையங்களில் இலவச ‘வை-பை’

மே மாதம் 2.35 கோடி பேர் பயன்படுத்தினர்: இந்த ஆண்டுக்குள் 4,791 ரெயில் நிலையங்களில் இலவச ‘வை-பை’
இலவச ‘வை-பை’ இந்த ஆண்டுக்குள் 4,791 ரெயில் நிலையங்களில் வழங்கப்பட உள்ளது. கடந்த மே மாதம் 2.35 கோடி பேர் இதனை பயன்படுத்தினர்.
புதுடெல்லி,

இந்திய ரெயில்வேக்கு இணையதள சேவை வழங்கும் ரெயில்டெல் நிறுவனத்தின் தலைமை நிர்வாக இயக்குனர் புனீத் சாவ்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

2016-ம் ஆண்டு மும்பை சென்டிரல் ரெயில் நிலையத்தில் முதல் முறையாக இலவச வை-பை வசதி வழங்கப்பட்டது. அடுத்த 16 மாதங்களில் இந்தியா முழுவதும் 1,606 ரெயில் நிலையங்களில் இந்த வசதி வழங்கப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் இந்த ரெயில் நிலையங்களில் 2.35 கோடி பேர் இலவச வை-பை வசதியை பயன்படுத்தி உள்ளனர். இந்த இலவச வை-பை சேவை எஞ்சிய 4,791 ரெயில் நிலையங்களுக்கும் இந்த ஆண்டுக்குள் வழங்கப்படும். இதன்மூலம் இந்தியாவில் உள்ள அனைத்து ரெயில் நிலையங்களிலும் இலவச வை-பை வசதி கிடைக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.