பட்ஜெட் உரையை வாசிக்கும் முன் பெற்றோரிடம் ஆசி பெற்ற நிர்மலா சீதாராமன்


பட்ஜெட் உரையை வாசிக்கும் முன் பெற்றோரிடம் ஆசி பெற்ற நிர்மலா சீதாராமன்
x
தினத்தந்தி 6 July 2019 1:00 AM IST (Updated: 6 July 2019 12:35 AM IST)
t-max-icont-min-icon

பட்ஜெட் உரையை வாசிக்கும் முன் பெற்றோரிடம் நிர்மலா சீதாராமன் ஆசி பெற்றார்.

புதுடெல்லி,

நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்வதை பார்ப்பதற்காக அவரது பெற்றோர், மகள் வங்மாயி பர்கலா ஆகியோர் நேற்று நாடாளுமன்றத்துக்கு வந்து இருந்தனர்.

பட்ஜெட் உரையை வாசிக்க தொடங்கும் முன் நிர்மலா சீதாராமன், பார்வையாளர்கள் மாடத்தில் இருந்த பெற்றோரை நோக்கி ஆசி வாங்குவதற்காக கைகளை மடக்கி சற்று குனிந்தார். அப்போது அவரது தந்தை நிர்மலா சீதாராமனை நோக்கி தனது வலது கையை உயர்த்தி ஆசி வழங்கினார். அதன்பிறகு நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை வாசிக்க தொடங்கினார்.

Next Story