திருமணத்துக்கு முன்பு எச்.ஐ.வி. பரிசோதனை கட்டாயம்: வருகிறது புதிய திட்டம்


திருமணத்துக்கு முன்பு எச்.ஐ.வி. பரிசோதனை கட்டாயம்: வருகிறது புதிய திட்டம்
x
தினத்தந்தி 10 July 2019 11:37 AM IST (Updated: 10 July 2019 11:37 AM IST)
t-max-icont-min-icon

திருமணத்தை பதிவு செய்வதற்கு முன்பு, மணமக்கள் எச்.ஐ.வி. பரிசோதனை செய்து கொள்வதை கட்டாயமாக்க திட்டம்!!

பனாஜி,

திருமணத்தை பதிவு செய்வதற்கு முன்னர் தம்பதிகளுக்கு எச்.ஐ.வி பரிசோதனையை கட்டாயமாக்க மாநில அரசு திட்டமிட்டுள்ளதாக கோவா சுகாதார அமைச்சர் விஸ்வாஜித் ரானே திங்கள் கிழமை தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது:-

கோவாவில் திருமணத்தை பதிவு செய்வதற்கு முன்பு தம்பதிகளுக்கு எச்.ஐ.வி. பரிசோதனையை கட்டாயமாக்குவதே திட்டம்.

கடலோர மாநிலத்தில் சோதனையை கட்டாயமாக்குவதற்கான திட்டத்தை கோவா சட்டத்துறை ஆய்வு செய்து வருகிறது.  இந்த யோசனைக்கு மாநில சட்டத்துறை ஒப்புதல் அளித்து விட்டது. மசோதாவுக்கும் ஒப்புதல் அளித்த பிறகு, வரும் மழைக்கால கூட்டத்தொடரில் இதுதொடர்பான மசோதா சட்டசபையில் தாக்கல் செய்யப்படும் என கூறினார்

2006 ஆம் ஆண்டில், அப்போதைய காங்கிரஸ் தலைமையிலான மாநில அரசு இதேபோன்ற சட்டத்தை முன்மொழிந்தது, இது பல தரப்பினரின் எதிர்ப்பை சந்தித்தது குறிப்பிடத்தக்கது. 

Next Story