தேசிய செய்திகள்

துப்புரவு தொழிலாளியாக மாறிய முன்னாள் கனவுக்கன்னி; டிரெண்ட்டில் ஹேமாமாலினி + "||" + BJP MPs Hema Malini, Anurag Thakur Sweep Road On Parliament Premises

துப்புரவு தொழிலாளியாக மாறிய முன்னாள் கனவுக்கன்னி; டிரெண்ட்டில் ஹேமாமாலினி

துப்புரவு தொழிலாளியாக மாறிய முன்னாள் கனவுக்கன்னி; டிரெண்ட்டில் ஹேமாமாலினி
தூய்மை இந்தியா நிகழ்ச்சியில் துப்புரவு தொழிலாளியாக மாறிய ஹேமாமாலினி தரைக்கும், துடைப்பத்துக்கும் வலிக்காமல் மிக மெதுவாக கூட்டினார்.
புதுடெல்லி,

நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற தூய்மை இந்தியா நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் அனுராக்தாக்கூர், எம்.பி.யும், நடிகையுமான ஹேமாமாலினி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஹேமாமாலினி குப்பையை அகற்ற முற்பட்ட இடத்தில் குப்பையே இல்லாததால் தயங்கி நின்ற நிலையில் குப்பை இருக்கும் இடத்தை அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். அதனைத் தொடர்ந்து அங்கு சென்று ஹேமாமாலினி குப்பையை அகற்றினார். அவர் தரைக்கும்,  துடைப்பத்துக்கும் வலிக்காமல் மிக மெதுவாக கூட்டினார். 

ஹேமாமாலினியின் ட்விட்டர் டிரெண்ட்  பட்டியலில் 3-வது இடத்தில் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.