ராஜஸ்தானில் பள்ளி மாணவர்களுக்கு போலீசாருக்கான பயிற்சி வழங்க அரசு முடிவு


ராஜஸ்தானில் பள்ளி மாணவர்களுக்கு போலீசாருக்கான பயிற்சி வழங்க அரசு முடிவு
x
தினத்தந்தி 18 July 2019 1:00 PM GMT (Updated: 18 July 2019 1:00 PM GMT)

ராஜஸ்தானில் பள்ளி மாணவர்களுக்கு போலீசாருக்கான பயிற்சி வழங்க அரசு முடிவு செய்துள்ளது.

கோட்டா,

ராஜஸ்தானில் அரசு பள்ளி கூடங்களில் படித்து வரும் மாணவ மாணவிகளுக்கு போலீசாருக்கு வழங்கப்படும் பயற்சியை வழங்க அரசு முடிவு செய்துள்ளது.  இரண்டு வருட திட்டத்தின்படி, 8 மற்றும் 9 வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு இந்த பயிற்சி அளிக்கப்படும்.

அவர்களை மனதளவில் மற்றும் உடலளவில் வலிமையானவர்களாக்கவும், அடிப்படை சட்டங்கள் மற்றும் சட்ட நடைமுறைகளை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தவும் மற்றும் இளம்பருவத்தினர் மீது அதிகரித்து வரும் தவறான நடத்தைகள் ஆகியவற்றை கட்டுப்படுத்தவும் இத்திட்டம் இலக்கு கொண்டுள்ளது.

இந்த திட்டத்தில் பயிற்சி பெறும் மாணவர்கள் குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினம் ஆகிய நாட்களில் நடைபெறும் பொது நிகழ்ச்சிகளில் தன்னார்வலர்களாக சேவை பணியில் ஈடுபடுவார்கள்.  மத்திய அரசின் விதிமுறைகளின்படி, இந்த திட்டம் 930 மாநில அரசு பள்ளிகள் மற்றும் 70 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்படும்.

Next Story