ஆற்றில் நீந்திய கன்றின் கழுத்தில் கட்டப்பட்டிருந்த வெடிகுண்டு, எல்லைப் பாதுகாப்பு படை அதிர்ச்சி


ஆற்றில் நீந்திய கன்றின் கழுத்தில் கட்டப்பட்டிருந்த வெடிகுண்டு, எல்லைப் பாதுகாப்பு படை அதிர்ச்சி
x
தினத்தந்தி 26 July 2019 2:25 PM GMT (Updated: 26 July 2019 2:25 PM GMT)

மேற்கு வங்காளத்தில் வங்காளதேச எல்லையில் ஆற்றில் நீந்திய கன்றின் கழுத்தில் வெடிகுண்டு கட்டப்பட்டிருந்தது எல்லைப் பாதுகாப்பு படையினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

மேற்கு வங்காள மாநிலத்தில் இருந்து சட்டவிரோதமாக வங்காளதேசத்திற்கு கால்நடைகள் கடத்தப்படுவது தொடர் கதையாக இருந்து வருகிறது. இதனை தடுக்க எல்லைப் பாதுகாப்பு படையும் நடவடிக்கை எடுத்து வருகிறது. இப்போது எல்லைப்பகுதியில் உள்ள ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து செல்கிறது. ஆறுகள் வழியாக பசுக்களை கடத்தும் நடவடிக்கையில் கடத்தல் காரர்கள் இறங்கியுள்ளனர். பசுக்களின் இருபுறமும் வாழைமரத்தை கட்டிவிட்டு, அதன் கழுத்துப்பகுதியில் வெடிகுண்டை கட்டியுள்ளனர். இப்படி வங்காளதேசம் எல்லையை நோக்கி வந்த கன்று ஒன்றை எல்லைப் பாதுகாப்பு படையினர் பத்திரமாக மீட்டுள்ளனர். எல்லைப் பாதுகாப்பு படையினரை காயப்படுத்தும் நோக்கத்துடன் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. பாதுகாப்பு படையினர் உஷாராக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள கடத்தல் காரர்கள் மாடுகளை இதுபோன்று வங்காளதேசத்திற்குள் அனுப்புகின்றனர். அங்குள்ளவர்கள் அதனை மீட்டு வைத்துக் கொள்கிறார்கள் என தெரியவந்துள்ளது.

Next Story