தேசிய செய்திகள்

அணு ஆயுதப் பயன்பாடு எதிர்காலத்தில் சூழ்நிலையை பொறுத்தது - ராஜ்நாத் சிங் பேட்டி + "||" + Defence Minister Rajnath Singh in Pokhran: Till today, our nuclear policy is 'No First Use

அணு ஆயுதப் பயன்பாடு எதிர்காலத்தில் சூழ்நிலையை பொறுத்தது - ராஜ்நாத் சிங் பேட்டி

அணு ஆயுதப் பயன்பாடு எதிர்காலத்தில் சூழ்நிலையை பொறுத்தது -  ராஜ்நாத் சிங் பேட்டி
அணு ஆயுதப் பயன்பாடு எதிர்காலத்தில் சூழ்நிலையை பொறுத்தது என்று மத்திய பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங் கூறினார்.
புதுடெல்லி

இன்று பொக்ரானில் அடல் பிகாரி வாஜ்பாய் முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அஞ்சலி செலுத்தினார். அப்போது வாஜ்பாய்க்கு மரியாதை செலுத்த இதுவே சரியான இடமாகும் எனவே இங்கு எனது அஞ்சலியை செலுத்துகிறேன் என்று தெரிவித்தார்.

அங்கு நிருபர்களிடம் ராஜ்நாத் சிங் கூறும் போது

எதிரி நாடுகள் பயன்படுத்தினால் பதில் தாக்குதலுக்கு மட்டுமே அணு ஆயுதம் பயன்படுத்தப்படும் என்பதே இந்தியாவின் கொள்கையாக உள்ளது. ஆனால், எதிர்கால சூழ்நிலைக்கு ஏற்ப நாட்டின் அணு;ஆயுதக் கொள்கை மாற வாய்ப்புள்ளது என்று கூறினார்.