பொருளாதார மந்த நிலை: மத்திய அரசு மீது பிரியங்கா காந்தி கடும் விமர்சனம்


பொருளாதார மந்த நிலை:  மத்திய அரசு மீது பிரியங்கா காந்தி கடும் விமர்சனம்
x
தினத்தந்தி 19 Aug 2019 4:05 PM GMT (Updated: 19 Aug 2019 4:05 PM GMT)

பொருளாதார மந்த நிலை குறித்து மத்திய அரசு மவுனம் காப்பது ஏன்? என்று பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

புதுடெல்லி, 

பொருளாதர விவகாரத்தில் மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசு ஏன் அமைதியாக இருக்கிறது என காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயளாலர் பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் டுவிட்டரில் வெளியிட்ட செய்தியாவது: 

நாட்டில் செயல்படும் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் உள்பட அனைத்து தொழில் நிறுவனங்களும் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. அவற்றின் உற்பத்தியும் தேக்க நிலையில் உள்ளது. 

மேலும், நிறுவனங்களில் வேலைசெய்யும் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படுகின்றனர்.  ஆனால் நாட்டின் பொருளாதார மந்த நிலைக்கு பொறுப்பேற்க வேண்டிய மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசு மிகவும் அமைதியாக இருக்கிறது. இந்த அமைதி நாட்டுக்கு மிகவும் ஆபத்தானது” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

Next Story