"சட்டத்தை மதித்து நடப்பவன் நான்" - கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே.சிவகுமார்


சட்டத்தை மதித்து நடப்பவன் நான் - கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே.சிவகுமார்
x
தினத்தந்தி 30 Aug 2019 10:07 AM GMT (Updated: 30 Aug 2019 11:06 AM GMT)

சட்டத்தை மதித்து நடப்பவன் நான் என கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே.சிவகுமார் கூறி உள்ளார்.

பெங்களூரு

வரி ஏய்ப்பு மற்றும் சட்டவிரோத பரிவர்த்தனைகள் தொடர்பாக கடந்த ஆண்டு செப்டம்பரில்  கர்நாடக காங்கிரஸ் மூத்த தலைவர் டி.கே.சிவகுமார் மற்றும் ஒரு சிலருக்கு எதிராக அமலாக்க இயக்குநரகம் பண மோசடி வழக்கு பதிவு செய்தது.

பணமோசடி வழக்கு தொடர்பாக டெல்லியில் இன்று பிற்பகல் ஆஜராகுமாறு முன்னாள் அமைச்சருக்கு  அமலாக்க துறை சம்மன் அனுப்பியது.

சம்மனை ரத்து செய்ய கோரிய சிவகுமாரின் மனுவை  கர்நாடக ஐகோர்ட்  நேற்று நிராகரித்தது.

இன்று காலை டெல்லிக்குச் செல்வதற்கு முன்பு நிருபர்களுக்கு பேட்டி அளித்த சிவக்குமார் கூறியதாவது:-

டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நான்  ஆஜராக உள்ளேன். ​கவுரி பூஜை உள்ளிட்ட சில நிகழ்ச்சிகளில் பங்கேற்க இருப்பதால், தாமதமாக ஆஜராக அமலாக்கத்துறைக்கு தகவல் அளித்து உள்ளேன். இன்று அமலாக்கத் துறையில் ஆஜராகி அவர்களுக்கு தேவையான விளக்கம் அளிக்க உள்ளேன். 

தயவுசெய்து பதற்றம் அடைய வேண்டாம்  நான் பதற்றம் அடையவில்லை. பதற்றம் அடைய  வேண்டிய அவசியமில்லை. நான் எந்த தவறும் செய்யவில்லை. நான் எந்த கற்பழிப்பு குற்றம் செய்யவில்லை அல்லது பணம் எடுக்கவில்லை, எனக்கு எதிராக எதுவும் இல்லை.

தான் சட்டத்தை  மதித்து நடப்பவன் என்றும், இதுவரை அப்படிதான் நடந்து வந்துள்ளேன் என கூறினார்.

Next Story