பள்ளிக்கூட மேற்கூரை இடிந்து விழுந்து 50 குழந்தைகள் காயம் 6-க்கும் மேற்பட்ட குழந்தைகள் நிலைமை கவலைக்கிடம்


பள்ளிக்கூட மேற்கூரை இடிந்து விழுந்து 50 குழந்தைகள் காயம்  6-க்கும் மேற்பட்ட குழந்தைகள் நிலைமை கவலைக்கிடம்
x
தினத்தந்தி 7 Sep 2019 11:57 AM GMT (Updated: 7 Sep 2019 11:57 AM GMT)

மீரட்டில் பள்ளிக்கூடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து 50 குழந்தைகள் காயம் அடைந்தனர். 6-க்கும் மேற்பட்ட குழந்தைகள் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

மீரட்,

உத்தரபிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தில் சர்தானாவின் தபாத்துவா  கிராமத்தில் சரஸ்வதி க்யான் மந்திர் என்ற பள்ளிக்கூடம் இயங்கி வந்தது. இன்று சனிக்கிழமை வழக்கம்போல் பள்ளிக்கூடம் இயங்கியது. அப்போது  பள்ளிக்கூடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இடிபாடுகளுக்குள் பல  குழந்தைகள் சிக்கிக் கொண்டனர். குழந்தைகள் உடனடியாக மீட்கப்பட்டு  அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதில் குறைந்தது ஆறு குழந்தைகள் ஆபத்தான நிலையில் உள்ளனர்.

உள்ளூர் மக்களுடன் சேர்ந்து காவல்துறையினர் குழந்தைகளை மீட்டு  அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அலட்சியத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு ராம் அர்ஜ் தெரிவித்தார்.

Next Story