நாடாளுமன்ற மக்களவை சபாநாயகர் பயணம் செய்த ரெயிலில் மதுபோதையில் ரகளை; 5 பேர் கைது
நாடாளுமன்ற மக்களவை சபாநாயகர் பயணம் செய்த ரெயிலில் மதுபோதையில் ரகளையில் ஈடுபட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
மதுரா,
நிஜாமுதீனில் இருந்து இந்தூர் நோக்கி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டு சென்றது. இதில் டெல்லி மற்றும் குர்காவன் நகரை சேர்ந்த 5 பேர் ஏ.சி. பெட்டி ஒன்றில் பயணம் செய்துள்ளனர்.
அதற்கு அடுத்த பெட்டியில் நாடாளுமன்ற மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா பயணம் செய்துள்ளார். அவர் கோட்டா நகரை நோக்கி சென்று கொண்டிருந்துள்ளார். இந்த நிலையில், அந்த 5 பேரும் மதுபானம் குடித்து விட்டு ரகளையில் ஈடுபட்டனர்.
இதனால் தனது தனி உதவியாளர் ராகவேந்திராவை அனுப்பி என்னவென்று விசாரிக்கும்படி கூறியுள்ளார். ஆனால் அவரிடம் 5 பேரும் வாக்குவாதம் செய்துள்ளனர். இதுபற்றி ரெயில்வே அதிகாரிகளிடம் கூறும்படி ராகவேந்திராவிடம் பிர்லா கூறினார்.
இதனிடையே ரெயில், உத்தர பிரதேசத்தின் மதுரா நகருக்கு வந்தடைந்தது. அங்கு ரெயில்வே போலீசார் அவர்கள் 5 பேரையும் கைது செய்தனர். விசாரணையில் மது குடித்து விட்டு ரகளையில் ஈடுபட்டோம் என அவர்கள் ஒப்பு கொண்டனர். அவர்களிடம் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story