மராட்டிய சட்டசபை தேர்தல்: நாக்பூரில் முதல்-மந்திரி பட்னாவிஸ் வேட்புமனு தாக்கல்


மராட்டிய சட்டசபை தேர்தல்: நாக்பூரில் முதல்-மந்திரி பட்னாவிஸ் வேட்புமனு தாக்கல்
x
தினத்தந்தி 4 Oct 2019 8:54 PM GMT (Updated: 4 Oct 2019 10:53 PM GMT)

மராட்டிய சட்டசபை தேர்தலில், நாக்பூர் தொகுதியில் முதல்-மந்திரி பட்னாவிஸ் வேட்புமனு தாக்கல் செய்தார்.

மும்பை,

மராட்டிய சட்டசபை தேர்தல் வருகிற 21-ந் தேதி நடக்கிறது. ஆளும் பா.ஜனதா-சிவசேனா கூட்டணி ஒரு அணியாகவும், எதிர்க்கட்சிகளான காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி மற்றொரு அணியாகவும் தேர்தலை சந்திக்கின்றன.

வேட்புமனு தாக்கல் செய்ய நேற்று கடைசி நாள் என்பதால் வேட்பாளர்கள் அனைவரும் போட்டி, போட்டு வேட்புமனு தாக்கல் செய்தனர்.

நாக்பூர் தென்மேற்கு தொகுதியில் போட்டியிடும் மாநில முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். பாராமதி தொகுதியில் போட்டியிடும் தேசியவாத காங்கிரசை சேர்ந்த முன்னாள் துணை முதல்-மந்திரி அஜித்பவாரும், வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

Next Story