21 வயதிலே போதைக்கு அடிமையாகும் இந்திய இளைஞர்கள்


21 வயதிலே போதைக்கு அடிமையாகும் இந்திய இளைஞர்கள்
x
தினத்தந்தி 9 Oct 2019 9:44 PM GMT (Updated: 9 Oct 2019 9:44 PM GMT)

21 வயதிலே போதைக்கு இந்திய இளைஞர்கள் அடிமையாகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

மும்பை,

உலக அளவில் அதிக மது அருந்துவோர் பட்டியலில் ஒன்றாக இந்தியா கருதப்படுகிறது. மும்பையில் அமைந்துள்ள புனித சேவியர் கல்லூரியின் முதலாம் ஆண்டு மாணவர்கள் சமீபத்தில் ஒரு ஆய்வு நடத்தினர். மும்பை, புனே, டெல்லி, கொல்கத்தா, ராஜஸ்தான் உள்பட இந்தியாவின் பல்வேறு நகரங்களைச் சேர்ந்த 16 முதல் 21 வயதுக்குட்பட்ட 1,000 இளைஞர்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

அதில் 75 சதவீத இளைஞர்கள் 21 வயதை அடைவதற்கு முன்பே மது அருந்தியதாக அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது. மேலும் 47 சதவீதம் பேர் சிகரெட் புகைக்க முயற்சிப்பதாகவும், 20 சதவீதம் பேர் வேறு போதைப்பொருளை பயன்படுத்துவதாகவும் ஆய்வு வெளிப்படுத்துகிறது. ஏறக்குறைய 88 சதவீத இளைஞர்கள் 16 முதல் 18 வயதுக்குள் போதை பழக்கங்களுக்கு அடிமையாகி வருகிறார்கள் என்று அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

Next Story