ராஜஸ்தான் மாநிலத்தில் பாகிஸ்தான் கொடியுடன் கூடிய பலூன்கள் கிடந்ததால் பரபரப்பு


ராஜஸ்தான் மாநிலத்தில் பாகிஸ்தான் கொடியுடன் கூடிய பலூன்கள் கிடந்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 12 Oct 2019 1:51 AM IST (Updated: 12 Oct 2019 1:51 AM IST)
t-max-icont-min-icon

ராஜஸ்தான் மாநிலத்தில் பாகிஸ்தான் கொடியுடன் கூடிய பலூன்கள் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பிகனீர்,

ராஜஸ்தான் மாநிலம் கங்காநகர் மாவட்டம் பாகிஸ்தான் எல்லையோரம் உள்ளது. அந்த மாவட்டத்தின் ரைசிங் நகர் பகுதியில் பாகிஸ்தான் கொடி பதித்த பலூன்கள் கிடந்தன. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அதை மக்கள் எடுத்து பார்த்ததில் ‘14 ஆகஸ்டு முபாரக்‘ என எழுதப்பட்டு இருந்தது. பாகிஸ்தான் சுதந்திரதின விழாவை ஆகஸ்டு 14 கொண்டாடிவருகிறது. அதை குறிக்கும் வகையில் இந்த பலூன்களில் வாசகங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக இதுவரை 12-க்கும் மேற்பட்ட பலூன்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து போலீசார் மத்திய புலனாய்வு அமைப்புகளுக்கு தகவல் கொடுத்தனர்.

Next Story