புதுச்சேரியில் மாதிரி வாக்குப்பதிவு தொடங்கியது
புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதியில் மாதிரி வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது.
புதுச்சேரி,
புதுவை காமராஜ் நகர் தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல் அரசியல் கட்சியினர் வாக்காளர்களை சந்தித்து ஆதரவு திரட்டினர். வேட்புமனு தாக்கல் முடிவடைந்த நிலையில் பிரசாரம் தீவிரமானது.
காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமார், என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் புவனேஸ்வரன், மக்கள் முன்னேற்ற காங்கிரஸ் வேட்பாளர் வெற்றிசெல்வம், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பிரவீனா உள்பட 9 பேர் களத்தில் உள்ளனர்.
இதனை முன்னிட்டு புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதிக்கான மாதிரி வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. தொடர்ந்து 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெறும்.
காலை 7 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறும். தொகுதியில் 32 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
ஓட்டுப்பதிவை சுதந்திரமாகவும், அமைதியாகவும் நடத்தி முடிக்க இரு தொகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. துணை ராணுவப்படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.
தொகுதியில் 7 வாக்குச்சாவடிகள் பதற்றம் நிறைந்தவையாக கண்டறியப்பட்டு உள்ளதால், அங்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story