நாட்டின் கவர்னரால் மனதில் பட்டதை கூட சொல்ல முடியாது - சத்யபால் மாலிக்


நாட்டின் கவர்னரால் மனதில் பட்டதை கூட சொல்ல முடியாது - சத்யபால் மாலிக்
x
தினத்தந்தி 22 Oct 2019 10:47 PM IST (Updated: 22 Oct 2019 10:47 PM IST)
t-max-icont-min-icon

நாட்டின் கவர்னரால் மனதில் பட்டதை கூட சொல்ல முடியாது என காஷ்மீர் கவர்னர் சத்யபால் மாலிக் தெரிவித்துள்ளார்.

ஜம்மு,

நாட்டில் கவர்னர்களின் நிலை மிகவும் மோசமாக இருப்பதாக ஜம்மு-காஷ்மீர் கவர்னர் சத்யபால் மாலிக் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஷ்மீரில் ரியாசி மாவட்டம் கத்ராவில் உள்ள மாதா வைஷ்ணதேவி பல்கலைக்கழகத்தில் 7-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய கவர்னர் சத்யபால் மாலிக், “கவர்னர் பதவி பலவீனமானது. பத்திரிகையாளர் சந்திப்பை கூட நடத்த முடியவில்லை. மனதில் இருப்பதை என்னால் பேச முடிவதில்லை. எனது வார்த்தை டெல்லியில் உள்ளவர்களை காயப்படுத்தாது என நம்புகிறேன். இதன் காரணமாக 3 நாட்கள் பயத்தில் இருந்தேன்” என்று கூறினார். மேலும், “ நாட்டில் உள்ள வசதிபடைத்த மக்களில் ஒரு பிரிவினர் அழுகிய உருளைகிழங்கு போன்றவர்கள். அத்தகைய மக்கள், யாருக்கும் உதவி செய்வதில்லை. அவர்கள் நாட்டின் கல்வி அமைப்பை மேம்படுத்த உதவ முன்வருவதில்லை” என்றும் கூறினார்.

Next Story