சேலை கலரை மாற்றியது ஒரு தப்பா? வைரலான பெண் தேர்தல் அதிகாரி


சேலை கலரை மாற்றியது ஒரு தப்பா? வைரலான பெண் தேர்தல் அதிகாரி
x
தினத்தந்தி 23 Oct 2019 6:17 AM GMT (Updated: 23 Oct 2019 6:17 AM GMT)

பெண் தேர்தல் அதிகாரி பிங்க் நிற சேலையில் வந்ததை சிலர் புகைப்படமெடுத்து சமூக வலைதளங்களில் பதிவு செய்தனர். இந்த படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளன.

லக்னோ,

கடந்த மே 5 அன்று நாடாளுமன்ற தேர்தலில் பத்திரிகையாளர் ஒருவர் தேர்தல்  அதிகாரி ரீனா திவேதி படங்களை சமூக ஊடகங்களில் வெளியிட்டபோது  ஒரே இரவில் பரபரப்பை ஏற்படுத்தினார்.

உத்தரபிரதேசத்தில்  சமீபத்தில்  லக்னோ கண்டோன்மெண்ட் சட்டப்பேரவை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்தத் தொகுதிக்கு உட்பட்ட கிருஷ்ணாநகரிலுள்ள மகாநகர் கல்லூரியில் ரீனா திவேதிக்கு தேர்தல் பணி ஒதுக்கப்பட்டிருந்தது. வாக்குப்பதிவு நாளன்று வழக்கமாக மஞ்சள் நிற சேலையில் வரும் ரீனா திவேதி, ( கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மஞ்சள் சேலையில் தான் வந்தார்) இம்முறை இளஞ்சிவப்பு (பிங்க்) நிற சேலையில் வந்தார். இது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.

அவர் பிங்க் நிற சேலையில் வந்ததை சிலர் புகைப்படமெடுத்து சமூக வலைதளங்களில் பதிவு செய்தனர். இந்தப் படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளன. 

இதுகுறித்து ரீனா திவேதி கூறும்போது, “எனக்கு தற்போது 32 வயதாகிறது. எனக்கு இளமையிலேயே திருமணமாகி விட்டது. எனக்கு மகன் உள்ளார். இது வழக்கமாக என்னுடன் பணியாற்றும் சக ஊழியர் எடுத்த புகைப்படம்தான். அது வைரலாகி விட்டது. அதேசமயம், நான் பிரபலமாகி விட்டது மகிழ்ச்சியும் தருகிறது. நான் செல்லும் இடங்களில் எல்லாம் என்னை எளிதில் அடையாளம் கண்டுகொள்கிறார்கள்” என்றார். இவருக்கு 15 வயதில் மகன் உள்ளான். 2013-ல் இவரது கணவர் காலமானதையடுத்து பொதுப்பணித்துறையில் இவருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Next Story