பெண்கள் மசூதிகளுக்குள் நுழைவதற்கான அனுமதி: மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்


பெண்கள் மசூதிகளுக்குள் நுழைவதற்கான அனுமதி: மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்
x
தினத்தந்தி 25 Oct 2019 9:48 AM GMT (Updated: 25 Oct 2019 9:48 AM GMT)

பெண்கள் மசூதிகளுக்குள் நுழைவதற்கான அனுமதி தொடர்பான வழக்கில் மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

புதுடெல்லி,

பெண்களை மசூதிகளுக்குள் அனுமதிக்குமாறு அரசாங்க அதிகாரிகளுக்கும், வக்ஃபு வாரியம் போன்ற முஸ்லிம் அமைப்புகளுக்கும் உத்தரவு பிறப்பிக்குமாறு யஸ்மீன் ஜுபர் அஹ்மத் பீர்சாட் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

இந்த மனு, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் மற்றும் நீதிபதிகள் எஸ்.ஏ.போப்டே மற்றும் எஸ்.ஏ.நஜீர் ஆகியோர் அடங்கிய பெஞ்ச்  முன் விசாரணைக்கு வந்தது. இது தொடர்பாக விளக்கம் அளிக்க கோரி மத்திய சட்டம் மற்றும் நீதி மற்றும் சிறுபான்மை விவகார அமைச்சகத்திற்கு நீதிபதிகள் நோட்டீஸ் அனுப்பினர்.

Next Story