தேசிய செய்திகள்

லாலு பிரசாத் யாதவ் வாழ்க்கை படமாகிறது + "||" + Get Ready for a Biopic on Lalu Prasad Yadav

லாலு பிரசாத் யாதவ் வாழ்க்கை படமாகிறது

லாலு பிரசாத் யாதவ் வாழ்க்கை படமாகிறது
பீகார் மாநில முன்னாள் முதல்-மந்திரி லாலு பிரசாத் யாதவின் வாழ்க்கை படமாகிறது.
பாட்னா,

அரசியல் கட்சி தலைவர்களின் வாழ்க்கை தற்போது படமாகி வெளிவருகின்றன. பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் ஆகியோரின் வாழ்க்கையும் சினிமா படமாகி வெளிவந்தன. இந்தநிலையில் தற்போது ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி தலைவரும், பீகார் மாநில முன்னாள் முதல்-மந்திரியுமான லாலு பிரசாத் யாதவின் வாழ்க்கையும் சினிமா படமாகிறது.


போஜ்பூரி நடிகர் யாஷ் குமார், லாலு பிரசாத் வேடத்தில் நடிக்கிறார். அவரது மனைவி ராப்ரி தேவி கதாபாத்திரத்தில், ஸ்மிரிதி சின்கா வருகிறார். இந்த படத்துக்கு ‘லால்டென்’ (லாந்தர் விளக்கு) என பெயர் வைக்கப்பட்டுள்ளது. ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் சின்னம் லாந்தர் விளக்கு என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. ஊரடங்கால் முடங்கிப்போன நெசவுத் தொழிலாளர்களின் வாழ்க்கை
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையின் காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதன் காரணமாக நெசவுத் தொழிலாளர்களின் வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.